கர்ணன் படத்தில் தனுஷ் நடிப்பை பார்த்து மிரண்ட ஹிந்தி இயக்குனர்.! என்ன சொன்னார் தெரியுமா.? வைரல் நியூஸ் இதோ.

தனுஷைப் பொறுத்தவரை சினிமாவில் தன்னையே நிலைநாட்ட எந்த எல்லைக்கும் செல்வார் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம் அதற்கு காரணம் தமிழ் சினிமாவில் தற்போது பல டாப் நடிகர்கள் இருக்கின்றனர்.

அவர்களை ஓரம் கட்ட தற்போது சம்பளத்தை கம்மியாக வாங்கி சிறப்பான கதைகளை உடனடியாக கைப்பற்றி அதில்  சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி சினிமாவில் அசுர வளர்ச்சியை கண்டுவருகிறார்.

தனுஷ் நடிப்பில் பல்வேறு திரைப்படங்களில் இவருக்குப் பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தாலும் சமீபத்தில் வந்த கர்ணன் திரைப்படம் அவரே எதிர்பார்க்காத அளவிற்கு உச்சத்திற்கு சென்று வைத்துள்ளது இதனால் தனுஷ் தற்போது இந்திய அளவில் பேசப்படும் நபராக மாறியுள்ளார்.

கர்ணன் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி வெற்றி கண்டு இருந்தாலும் தற்போது  OTT தளத்தில் வெளியாகி உள்ளதால் தற்போது அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு தற்போது வெளியாகி வெற்றிநடை கண்டு உள்ளது.

படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் தனுஷ் நடிப்பை பார்த்து ஆஹா ஓஹோ என புகழ்ந்து தள்ளி வருகின்றனர் அந்த வகையில் இந்தியில் தனுஷை வைத்து முதல் படத்தை எடுத்த ஆனந்த் எல் ராய் இயக்குனர் சமீபத்தில் தனுஷின் கர்ணன் திரைப்படத்தை பார்த்துவிட்டு தனுஷின் நடிப்பு யாரும் எதிர்பார்க்காத அளவில் இருந்தது.

மேலும் படம் என்ன சொல்ல வந்தை கிளியராக சொல்லி உள்ளதால் இந்த படம் வேற லெவல் இருக்கிறது என குறிப்பிட்டார் தற்போது ஆனந்த் எல் ராய் தனுஷை வைத்து ஒரு புதிய படத்தை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment