அமைச்சர் செல்லூர் ராஜு புல்லட்டில் ஏறி!! முதல்வன் பட பாணியில் அதிரடி!! மக்கள் பாராட்டு.

0

Minister Sellur Raju gets into the bullet !! Action in the style of the muthalvan movie !! People appreciate. மதுரையை அடுத்து உள்ள பெத்தானியபுரத்தில் மக்களுக்கு நிவாரண நிதி கொடுப்பதற்காக சென்றிருந்தார் அமைச்சர் செல்லூர் ராஜு. அப்போது அவரிடம் பெண்கள் சிலர் ரேஷன் கடையில் அரிசி போன்ற பொருடகளை எடைபோடாமல் கையாலேயே அள்ளித் தருகிறார் என புகார் அளித்தனர்.

புகாரைக் கேட்டபின் அதனை விசாரிப்பதற்காக அங்குள்ள அதிமுக நிர்வாகி ஒருவரின் புல்லட்டில் ஏரி செல்லூர் ராஜு விரைவாக சென்று நேரடியாக ஆய்வு நடத்தினார். ஆய்வு நடத்தியபோது ரேஷன் கடை ஊழியர் தெய்வேந்திரன் மேல் குற்றம் இருப்பது உறுதியானது.

மேலும் அவரை பணி நீக்கம் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உடனடியாக உத்தரவிட்டார். மேலும் அதுமட்டுமில்லாமல் கடையில் வெளி நபரான பெரியசாமி என்கின்ற நபர் ஒருவர் உள்ளிருந்ததால் அவரையும் கைது செய்யுமாறு காவல்துறைக்கு ஆணையிட்டார்.

கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின்  இந்த செயலை பார்த்து அங்குள்ள மக்கள் அவரை பாராட்டி நன்றி தெரிவித்தனர். தற்போது இந்த செய்தி இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.