மார்டன் உடையில் கணவருடன் நெருங்கி இருக்கும் புகைபடத்தை வெளியிட்ட மைனா.! வைரலாகும் புகைப்படம்.

தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் நந்தினி ஆவார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான மாபெரும் வெற்றி பெற்ற சீரியல் சரவணன் மீனாட்சி என்பது நம் அனைவருக்கும் தெரியும் அதில் நடிகைக்கு தோழியாக நடித்திருப்பார் நந்தினி. இந்த சீரியலின் மூலம் பட்டிதொட்டி எங்கும் அறிமுகமாகி கலக்கி வந்தார்.  அந்த சீரியலில் இவருடைய பெயர் மைனா ஆகும் இப்பெயர் மிகவும் பிரபலமானது இப்பொழுதுகூட நந்தினி என்பது பலருக்கு தெரியாது மைனா என சொன்னால்தான் தெரியும்.

இதனை தொடக்கமாக கொண்ட நந்தினி சிறிய வேடங்களில் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவரை பாண்டியராஜ் இயக்கத்தில் வெளிவந்த வம்சம் திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகையாக முதலில்  திரை உலகிற்கு அறிமுகமானார். இதுமட்டுமல்லாமல் இவர் முதலில் டான்ஸ்  நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு தொலைக்காட்சியின் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமல்லாமல் சீரியல்கள், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்தார் இந்த நிலையில் தற்பொழுது விஜய் டிவியில் வெளியாகி வந்த காமெடி ஷோ ஒன்றில் ஜட்ஜாக பணியாற்றி வருகிறார்.இந்த நிலையில் ஜிம் மாஸ்டர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஏற்கனவே அவருக்கு முதல் திருமணமானதை மறைத்து நந்தினியை திருமணம் செய்துகொண்டார் கார்த்திக் இதனை அறிந்த நந்தினி அவரைவிட்டு வந்துவிட்டார்  நந்தினி பிரிந்து தாங்கமுடியாமல் கார்த்திக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் தற்பொழுது பெற்றோர் சம்மதத்துடன் யோகேஸ்வரன் என்ற சீரிய நடிகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பது நம் அனைவருக்கும் தெரியும் தற்போது இவர் கர்ப்பமாக உள்ளதாக நந்தினியே கூறியுள்ளார்.இதனைத் தொடர்ந்து 5 மாதம் கர்ப்பமாக இருக்கும் நந்தினி தனது கணவருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். இதோ அந்த புகைப்படம்

nanthini 1
nanthini

Leave a Comment

Exit mobile version