மைக் மோகன் போல் மைக்கை பிடித்த சூர்யா.! வைரலாகும் நவரசா புதிய போஸ்டர்.!

தன்னால் முடியாது என்று பலரும் சொன்னால் அதையெல்லாம் காதில் வாங்காமல் என்னால் முடியும் முடியும் என்று சொல்லிக்கொண்டே வெற்றி பெற்று வருபவர் தான் சூர்யா இவரது திரைப்படங்கள் கடந்த சில வருடங்களாக மிகப்பெரிய வசூல் சாதனை செய்து வருகிறது அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான சூரரைப் போற்று திரைப்படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்று ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தையும் பெற்றிருந்தது.

மேலும் சூர்யா ஆரம்ப காலகட்டத்தில் நடித்த காக்க காக்க,வாரணம் ஆயிரம் போன்ற திரைப்படங்கள் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் ரீதியாகவும் அதிகம் வசூல் செய்து சாதனை படைத்தது சூர்யா ஆரம்ப காலகட்டத்தில் கௌதம் மேனன் கூட்டணியில் தான் நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தார் அதிலும் குறிப்பாக கௌதம் மேனன் கூட்டணியில் சூர்யா துப்பறியும் ஆனந்த் என்ற திரைப்படத்தில் நடித்து வந்ததாகவும் அந்த திரைப்படம் கதை சரியாக சூர்யாவிடம் கூறாமல் அப்படியே கைவிட பட்டது என தகவல் கிடைத்தது.

மேலும் சூர்யாவுக்கு அப்போது நிறைய பட வாய்ப்புகள் அதிகம் கிடைத்ததால் சூர்யாவும் இந்தத் திரைப்படத்தைப் பற்றி கண்டு கொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டாராம் இந்நிலையில் சூர்யா தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் பார்த்தால் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் வாடி வாசல் திரைப்படத்தை பற்றி புதிதாக அப்டேட் வெளிவருமா என பலரும் சமூக வலைதள பக்கங்களில் கேட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் புதிய தகவல் ஒன்று சூர்யாவைப் பற்றி கிடைத்துள்ளது ஆம் சூர்யா கௌதம் மேனன் கூட்டணியில் தற்போது நவரசா என்ற படத்தை ஒன்பது இயக்குனர்கள் இயக்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இதில் சூர்யா மற்றும் கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகி வரும் கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற இருக்கிறது.

navarasa
navarasa

இந்த நவரசா திரைப்படம் ஆகஸ்ட் மாதம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது என அதிகராபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது மேலும் இந்த தகவல் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது அதுமட்டுமல்லாமல் சூர்யாவிற்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் கிட்டத்தட்ட பார்த்தால் சூர்யா ஒரு பாடகனாக இந்த திரைப்படத்தில் நடித்து இருக்க வேண்டும் என பலரும் சமூக வலைதளங்களில் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment