CSK ரசிகர்களை வம்புக்கு இழுக்கும் MI அணி.? காரணம் இந்த வீடியோ தான்.

தற்போதைய காலகட்டத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போன விளையாட்டு என்றால் அதை கிரிக்கெட் தான் என்று நாம் கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம் அந்த அளவிற்கு தற்பொழுது மீடியாக்கள் அதனை மிகப்பெரிய அளவில் காட்டிக் கொண்டு வருகின்றன.

தற்போதைய காலகட்டத்தில் மிகவும் கிரிக்கெட் பிரபலமடைய காரணம் இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தான். ஐபிஎல் மொத்தம் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. தற்போது வரை 13 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.

அடுத்த சீசன் தற்போது தொடங்கியுள்ளது. தற்பொழுது கொரோனா வைரஸ்  பிரச்சனை இருப்பதால் நடத்த முடியாது என எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. ஆனால் ஐசிசியோ இதை நடத்தி தீரவேண்டும் என்பதால் பல முன்னெச்சரிக்கைகளை கையாண்டு பிற நாடுகளில் நடத்த திட்டம் தீட்டியது. அதற்கு தற்போது தான் முடிவுக்கு வந்துள்ளது.

தற்பொழுது ஐபிஎல் ஐக்கிய அரபு நாட்டில் நடத்தப்படும் என தெரியவருகிறது. இப்போட்டிகள் வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி நடத்தப்படும் என தெரிய வருகிறது. இதனை முன்னிட்டு ஐபிஎல்யில் உள்ள 8 அணிகளும் தற்போது UAE – ல் தங்கி பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

என்னதான் போட்டிகள் நடத்தப் பட்டாலும் அதனை நேரில் காண முடியாதது சற்று ரசிகர்களுக்கு பின்னடைவாக உள்ளது. இருப்பினும் ஐபிஎல் நடந்தால் போதும் என ஒரு பக்கத்தை ரசிகர்கள் தற்போது சந்தோஷம் அடைந்து வருகின்றனர்.

ஐபிஎல்லில் மிகவும் பழமை எதிரிகளாக பார்க்கப்படும் மும்பை மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே எப்பொழுதும் போட்டா போட்டி குறைதான் அப்படித்தான் இந்த ஐபிஎல் இருக்கப்போகிறது என தெரியவருகிறது.

அதற்கு தற்போது தீமூட்டி உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. வெப்சைட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியினரின் திறமையை வெளிக்காட்டும் படியான வீடியோவில்  தளபதி விஜய் அவர்கள்  நடித்து வெளிவந்த பிகில் திரைப்படத்திலிருந்து பாடலை மும்பை இந்தியன்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

அத்தகைய வீடியோவை பார்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் ரஜினியின் பாட்ஷா படத்தில் இருக்கும் ஒரு போட்டோவை வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளனர். இதோ அந்த வீடியோ.

Leave a Comment