எம்ஜிஆருக்கு பிடித்த விஜயகாந்த் படம்.. அட இதுவா.?

Vijayakanth : திரை உலகில் இருக்கும் ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு டாப் ஹீரோ முன்மாதிரியாக இருப்பார்கள் அப்படி கேப்டன் விஜயகாந்த் ரொம்பவும் பிடித்த நடிகர் எம் ஜி ஆர் தான். அவருடைய படங்களில் வரும் சண்டை காட்சிகளை அதிகம் பார்ப்பாராம்.

விஜயகாந்த் சினிமாவுக்கு வருவதற்கு அடித்தளமாக இருந்தவர் எம்ஜிஆர் அவரை எப்படியும் நேரில் பார்த்து விட வேண்டும் என ஆசைப்பட்டார் ஆனால் அந்த கனவு கனவாகவே போனதாம் இருப்பினும் எம்ஜிஆர் மனைவி ஜானகி அம்மாள் விஜயகாந்த் மீது ரொம்ப பாசமாக இருந்தாராம். ஜானகி அம்மாள் எங்கேயாவது வெளிநாடு சென்று வந்தால்..

இன்று போட்டி போட்டுக் கொண்டு வெளியாகியுள்ள 4 திரைப்படங்கள்.! தனுசை அசைத்துப் பார்க்க நினைக்கும் மூன்று நடிகர்கள்..

விஜயகாந்த் குழந்தைகளுக்கு சாக்லேட் அவர்களுக்கு பிடித்த பொருள்களை வாங்கி வந்து கொடுப்பாராம் விஜயகாந்த் அரசியல் துவங்கிய பொழுது எம்ஜிஆர் பயன்படுத்திய வட்டியை அவருக்கு பரிசாக கொடுத்தினார். விஜயகாந்த் இறக்கும் வரை அந்த வண்டியை ஒரு பொக்கிஷமாக பாதுகாத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பழைய பேட்டி ஒன்றில் எம்ஜிஆர் மற்றும் ஜானகி அம்மாள் குறித்து விஜயகாந்த் பேசி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. எம்ஜிஆர் படங்களை பார்த்து வளர்ந்தவன் நான்  சினிமாவில் நடித்த எம்ஜிஆரை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என ஆசைப்பட்டேன் ஆனால் அது நடக்கவில்லை ஜானகி அம்மாவுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது.

இந்தியாவிலேயே இதுதான் பெஸ்ட்.. அயலன் படம் குறித்து வெளியான விமர்சனம்..

எம் ஜி ஆருக்கு நீ நடித்த உழவன் மகன் படத்தை  ரொம்ப பிடிக்கும் அடிக்கடி அதை போட்டு பார்ப்பார் அந்த படத்தில் நீ மாட்டு வண்டி ஓட்டிக்கொண்டு போகும் பாடலை அடிக்கடி பார்த்து ரசிப்பார் என கூறினாராம். இதைக் கேட்ட கேப்டன் விஜயகாந்த் ரொம்ப சந்தோஷமாக இருந்தது என அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Exit mobile version