ஒத்த பைசா வாங்காமல் முழு படத்தையும் நடித்துக் கொடுத்த எம்ஜிஆர்.! இப்படி ஒரு மனசா

MGR : எம்ஜிஆர் நடிகராக உருவாகி பின் முதலமைச்சராக தமிழ்நாட்டை ஆண்டார்.  அதன் பிறகு மக்களுக்கு பல நல்ல திட்ட உதவிகளை உருவாக்கி அசத்தினார் அவர் மறைந்த பிறகும் அவரைப் பற்றிய பேச்சுக்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன. இந்த நிலையில் எம்ஜிஆர் காசே வாங்காமல் நடித்த திரைப்படம் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அது குறித்து விலாவாரியாக பார்ப்போம் 1947 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 -ல் வெளியான திரைப்படம் பைத்தியக்காரன். இந்த திரைப்படத்தை கிருஷ்ணன் பஞ்சு இயக்கினார். எஸ் வி சகஸ்ரநாமம், கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன், எம்ஜிஆர், எஸ் எஸ் ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

அந்த சமயத்தில் தான் பத்திரிக்கையாளர் லட்சுமி காந்தன் கொலை வழக்கில் கைதாகி தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் மற்றும் தியாகராஜ பாகவதர் இருவரும் லண்டன் பிரிவுயு கவுன்சிலிலில் மேல்முறையீடு செய்தனர் தன் வாழ்நாளில் தனக்கென எந்த சொத்தும் சேர்க்காத தர்மங்களில் செலவிட்டதால்..

ns krishnan
ns krishnan

எதிர்பாராத இந்த சம்பவத்திற்கு பின் கலைவாணர் குடும்பம் சிறிது பொருளாதார சிக்கலில் மாட்டியது. இதை உணர்ந்திருந்த எம்ஜிஆர் சம்பளமே வாங்காமல் அந்த படத்தில் நடித்து கொடுத்தார்.வழக்கின் தீர்ப்பு வெற்றி பெற என் எஸ் கிருஷ்ணன் உடனடியாக படத்தில் ஒரு வேடம் புகுத்தப்பட்டு மதுரத்தை இரட்டை வேடமாக்கி இன்னொரு மதுரத்துக்கு ஜோடியாக கலைவாணரை நடிக்க வைத்தனர்.

படம் வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது இந்த படத்தில் எம்ஜிஆரை போல பலரும் காசை வாங்காமல் நடித்து அவருக்கு நன்றி கடன் செலுத்தினர். படம் வெளியாகி 76 ஆண்டுகளை நிறைவு செய்தது அதாவது சுதந்திரத்திற்கு பிறகு 1947 ஆம் ஆண்டு இதே செப்டம்பர் 26 -ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டது  கிட்டத்தட்ட 76 ஆண்டுகளை நிறைவு செய்து.