mettioli serial actress latest photos: சன் டிவியில் மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி ரசிகர் மனதில் நீங்காத இடம் பிடித்த ஒரு சீரியல் தான் மெட்டி ஒலி. இந்த சீரியலில் இடம்பெற்ற அம்மி அம்மி அம்மி மிதித்து என்ற பாடல்தான் அது இன்றளவும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்த செய்திகள் கடந்த 2002ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இவ்வாறு உருவான இந்த பிரமாண்டமான சீரியலை பிரபல இயக்குனர் திருமுருகன் அவர்கள் தான் இயக்கியிருந்தார் மேலும் இந்த சீரியலில் காவேரி, காயத்ரி, வனஜா, உமா, ரேகா , நீலிமா ராணி, போஸ், வெங்கட், திருமுருகன், டெல்லி குமார் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்து உள்ளார்கள்.
இன்றளவும் இந்த சீரியலை மீண்டும் தொலைக்காட்சியில் வெளியிட்டால் ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். இந்த சீரியலில் ஐந்து பெண்களைப் பெற்ற தந்தையார் தனது குடும்பத்தை எப்படி நடத்துகிறார் என்பதை மையமாக வைத்துத்தான் இந்த மெட்டி ஒலி சீரியல் உருவானது.
மேலும் இந்த சீரியல் ஆனது சுமார் ஐந்து வருடங்களாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது அதுமட்டுமில்லாமல் இந்த சீரியலில் நடித்த பல்வேறு நடிகர்களும் இன்று மிக பிரபலமானது மட்டுமல்லாமல் வாய்ப்புகளையும் தட்டிப் பறித்து விட்டார்கள்.
இந்நிலையில் இந்த சீரியலில் சரோ என்ற கதாபாத்திரத்தில் நடித்த நமது காயத்திரியை யாராலும் மறக்க முடியாது இவர் சுரேஷ் மேனன் இயக்கிய பாசமலர் என்ற திரைப்படத்தில் கூட நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அதன்பிறகு தல அஜித் உடன் கூட ஒரு திரைப்படத்தில் ஜோடியாக நடித்துள்ளார் அது வேறு எந்த திரைப்படமும் கிடையாது தல மற்றும் தளபதி இணைந்து ஒன்றாக நடித்த ராஜாவின் பார்வையிலே.
ஆனால் ராஜாவின் பார்வையிலே திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே பாசமலர் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார் இந்த படத்தில் அரவிந்த்சாமி ரேவதி நடித்திருப்பார்கள் அதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அஜித்தும் நடித்திருந்தார் இந்நிலையில் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தற்போது 27 வருடம் கழித்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வைரல் ஆக்கி உள்ளார்.