திடீரென உயிரிழந்த மெட்டி ஒலி சீரியல் நடிகை.! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

சீரியல் என்றாலே சன் தொலைக்காட்சி தான் அந்த அளவு இல்லத்தரசிகள் மனதை சீரியல் மூலம் குடி புகுந்து விட்டார்கள். அதேபோல் சீரியல் மூலம் டிஆர்பி-யில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது சன் தொலைக்காட்சி தான் அன்றிலிருந்து இன்றுவரை  டி ஆர் பி இல் சிம்மாசனத்தில் இருக்கிறது சன் தொலைக்காட்சி.

அந்தவகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சீரியல் தான் மெட்டி ஒலி சீரியலில் மிகப்பெரிய சாதனையை படைத்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் ஒருகாலத்தில் மெட்டி ஒலி சீரியல் பாடல் வந்தாலே இல்லத்தரசிகள் எந்த வேலை இருந்தாலும் அதனை அப்படியே போட்டுவிட்டு டிவி முன்பு அமர்ந்து விடுவார்கள் அந்த அளவு மிகவும் பிரபலமான சீரியல்.

இந்த சீரியல் கொரோனா காலகட்டத்தில் கூட மீண்டும் ஒளிபரப்பப்பட்டது மீண்டும் ஒளிபரப்பினாலும் இந்த சீரியலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.  இந்த சீரியல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சோக செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.

மெட்டி ஒலி சீரியலில் விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் உமாமகேஸ்வரி இவர் மெட்டி ஒலி சீரியல் மட்டுமல்லாமல் பல சீரியல்களிலும் நடித்துள்ளார் இவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

uma mageshwari
uma mageshwari

இவரின் மரணச் செய்தி சீரியல் பிரபலங்களையும் ரசிகர்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரின் மறைவிற்கு மெட்டி ஒலி சீரியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள் மேலும் மெட்டி ஒலி சீரியலில் டெல்லி குமார், திருமுருகன், காவேரி, உமாமகேஸ்வரி, காயத்ரி, வனஜா ரேவதி, பிரியா போஸ் வெங்கட், ராஜா காந்த என பலர் நடித்திருந்தார்கள்.

மேலும் இந்த சீரியலை திருமுருகன் கோபிதான் இயக்கி இருந்தார் இவருக்கு ஜோடியாக தான் உமா மகேஸ்வரி நடித்திருந்தார். மேலும் இவர் வெள்ளித்திரையில் பார்த்திபன் முரளி மீனா மாளவிகா ஆகியோர் நடிப்பில் வெளியாகி வெற்றி கொடுத்த என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

மேலும் உன்னைநினைத்து அல்லி அர்ஜுனா ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தார் ஆனால் இவருக்கு பேரும் புகழும் பெற்று கொடுத்தது சின்னத்திரை தான்.

Leave a Comment