வெறித்தனமான ஒர்க் அவுட்..! 20 கிலோ உடல் எடையை குறைத்து சிக்குனு சிம்ரன் போல் மாறிய பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை கிருத்திகா.!

krithika : சமீப காலமாக நடிகைகள் மற்றும் சீரியல் நடிகைகள் பலரும் தங்களுடைய உடலை குறைப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள் அதற்கு காரணம் உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருந்தால்தான் அடுத்த அடுத்த வாய்ப்பை பெற முடியும் என்பதை அவர்கள் புரிந்து கொண்டு சமீப காலமாக உடல் எடையை பலரும் குறைத்து வருகிறார்கள்.

அந்த வகையில் சின்ன திரையில் மெட்டிஒலி என்ற சீரியல் மூலம் மிகவும் புகழ் பெற்றவர் நடிகை கிருத்திகா அண்ணாமலை  இவர் இந்த சீரியலில் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்க இடத்தை பிடித்தார் இதனை தொடர்ந்து தற்பொழுது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாண்டவர் இல்லம் என்ற தொடரில் நடித்து வருகிறார்.

இவரின் சமீபத்திய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளார்கள் ஏனென்றால் இவர் 20 கிலோ உடல் எடையை கடுமையாக குறைத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது மட்டும் இல்லாமல் எவ்வாறு குறைத்தேன் என்பதையும் வெளிப்படையாக பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது யோகா தினமும் காலையில் எழுந்தவுடன் 45 நிமிடம் வரை உடற்பயிற்சி செய்வாராம் அது மட்டும் இல்லாமல் சூரிய நமஸ்காரம் மிக மிக முக்கியம் எனவும் அதன் பிறகு ஜிம் வொர்க் அவுட் செய்வாராம் வாரத்தில் மூன்று நாட்கள் கட்டாயம் ஜிம் வொர்க் அவுட் செய்து வருவேன் அதே போல் உடல் எடையை குறைக்க ஆரம்பித்ததில் இருந்து ஆறு மாதங்களாக அரிசி உணவையே எடுத்துக் கொள்வதில்லை என கூறியுள்ளார்.

அரிசி உணவிற்கு பதிலாக சப்பாத்தி மட்டும் சாப்பிடுவேன் தினமும் சிக்கன் சாப்பிடுவேன் அது மட்டும் இல்லாமல் சிக்கன் புரோட்டீனுக்கு உதவியதாகவும் சில நாட்கள் சிக்கனுக்கு பதில் பன்னீர் சாப்பிடுவேன் என கூறியுள்ளார் தொப்பையை குறைக்க இரவு 7 மணிக்குள் டின்னர் சாப்பிட்டு விட்டு விடுவேன்.

உடல் எடையை குறைக்க மிக உயர்ந்த பானமாக நான் எடுத்துக் கொண்டது நெல்லிக்காய் பானம் மற்றும் வேப்பங்கொழுந்து சேர்த்து அரைத்து அதில் எலுமிச்சை சாறு சேர்த்து வெறும் வயிற்றில் குடித்தேன் எனக் கூறியுள்ளார்.

krithika annamalai weight loss
krithika annamalai weight loss

Leave a Comment