மெட்டி ஒலி சீரியலில் வில்லியாக மிரட்டிய நடிகையா இது.! என்ன ஒரு மார்டன் பிகரா இருக்காங்க

தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சீரியல்களுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது, ஏனென்றால் குடும்பப் பெண்கள் சீரியல் தான் அதிகம் விரும்பிப் பார்க்கிறார்கள், அதேபோல் சீரியலில் நடிக்கும் வில்லி கதாபாத்திரத்திற்கு குடும்ப பெண்கள் எவ்வளவு சாபம் விடுவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

ஏனென்றால் டிவி பார்த்துக்கொண்டிருக்கும்போது வில்லி கதாபாத்திரம் நடிகைகள் ஏதாவது செய்தால் அவ்வளவுதான் திட்டி தீர்த்து விடுவார்கள் குடும்பப் பெண்கள். குடும்பப் பெண்கள் திட்டுவதை காதில் வாங்கிக் கொண்டால் முன்னேறவே முடியாது என்கிற கருத்தைப் சீரியல் வில்லி நடிகைகள் கொள்கையாக வைத்திருப்பார்கள் போல.

ஏனென்றால் என்னதான் திட்டினாலும் அடுத்தடுத்து பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள், அந்த வகையில் பல சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ஒரு பாதையை அமைத்துக் கொண்டவர் கிருத்திகா, இவர் 2005ஆம் ஆண்டில் சன் தொலைக்காட்சியில் மெட்டி ஒலி என்ற சீரியலில் வில்லி நடிகையாக அறிமுகமானார் கிருத்திகா.

இதனைத் தொடர்ந்து செல்லமே வம்சம் கேளடி கண்மணி என பல சீரியல்களில் வில்லியாக நடித்து பிரபலம் அடைந்தார், சில வருடங்களுக்கு முன்பு அருண் சார் என்பவரை திருமணம் செய்துகொண்டு சீரியலில் நடிப்பதை நிறுத்தினார். இவருக்கு வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஏற்ற உடல் அமைப்பு இருந்ததால் இவருக்கு அதிகமாக வில்லி கதாபாத்திரம் அமைந்தது.

திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் இருக்கிறான் இவர்கள் இருவரும் இணைந்து டிக்டாக்கில் செய்யும் அலப்பறைகள் யாராலும் தாங்க முடியாது, இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு முரட்டுத்தனமான உடல் அமைப்பில் இருந்த கிருத்திகா தற்போது பள்ளிப்பருவ குழந்தை போல உடல் எடையை குறைத்து அழகாக மாறியுள்ளார் இதனை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

krithika-tamil360newz
krithika-tamil360newz

Leave a Comment