மீண்டும் சீரியலில் களமிறங்கும் மெட்டி ஒலி கோபி..! TRB-யை கண்டு பயந்து நடுங்கும் தொலைகாட்சிகள்..!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் திருமுருகன் இவர் மெட்டிஒலி சீரியல் மூலமாக மெட்டி ஒலி கோபி என்ற பெயரில் ரசிகர்கள் இவரை கொண்டாடி வந்தார்கள்.

அந்த வகையில் இவர் நடித்த மெட்டிஒலி சீரியலில் டெல்லி குமார், காவேரி, காயத்ரி, வனஜா, உமா மகேஸ்வரி, ரேவதி, பிரியா, போஸ் வெங்கட், ராஜ்காந்த், சைத்தான் சஞ்சீவ் போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த சீரியலில் நடித்துள்ளது இந்த சீரியலில்  திருமுருகன் நடித்தது மட்டும் இல்லாமல் இதனை அவர்தான் இயக்கியும் இருந்தார்.

இவ்வாறு ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமான இந்த சீரியல் ஏப்ரல் எட்டாம் தேதி 2002 ஆண்டு துவங்கி அக்டோபர் 14ஆம் நாள் 2005 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பாகியுள்ளது மேலும் இந்த செய்திகள் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற வகையில் மறுபடியும் ஒளிபரப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் நமது இயக்குனர் சீரியல் இயக்குவது மட்டுமில்லாமல் பரத், கோபிகா, நாசர், சரண்யா, வைகை புயல் வடிவேலு போன்றவர்களை வைத்து எம் மகன் என்ற திரைப்படத்தையும் இயக்கி உள்ளார் இந்த திரைப்படத்திற்கு முதலில் எம்டன் மகன் என்ற பெயரிடப்பட்டு பின்னர் எம் மகன் என்று மாற்றப்பட்டது பாக்ஸ் ஆபிஸில் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற மற்றொரு திரைப்படத்தையும் நமது இயக்குனர் இயக்கிய உள்ளார் பின்னர் திரைப்படத்திற்கு டாட்டா காட்டி விட்டு நாதஸ்வரம் மற்றும் குலதெய்வம் கல்யாண வீடு போன்ற தொடர்களை இயக்கிய திருமுருகன் அவர்கள் தற்பொழுது மிகப்பெரிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் சீரியல் இயக்க ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மீண்டும் திருமுருகன் சீரியலில் உதயமாவதை தொடர்ந்து ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருப்பது மட்டும் இல்லாமல் இல்ல தரசிகளும் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.

Leave a Comment