மெர்சல் படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.! படத்தை நிராகரித்ததற்கு இதோ அவரே கூறிய காரணம்

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய் இவர் நடிப்பில் தற்போது bபிகில் திரைப்படம் உருவாகி வருகிறது, இந்த படத்தில் விஜயுடன் இணைந்து நயன்தாரா நடித்து வருகிறார் மேலும் இந்த திரைப்படத்தில் விஜய் கால்பந்து கோச்சராக நடித்து வருகிறார் வருகிற தீபாவளிக்கு திரைப்படத்தை வெளியிட இருக்கிறார்கள்.

தளபதி விஜய் அட்லி இயக்கத்தில் மெர்சல் திரைப்படத்தில் நடித்து  மிகப் பெரிய ஹிட்டானது, இந்த திரைப்படம் விஜய்யின் திரைப்பயணத்தில் ஒரு புதிய மைல்கல்லாக அமைந்தது, படத்தில் விஜயின் மனைவியாக நித்யா மேனன் நடித்திருந்தார், இவரின் கதாபாத்திரம் அனைவரிடமும் நல்ல வரவேற்பு பெற்றது.

ஆனால் நித்யா மேனன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது, ஜோதிகா தானாம், ஆனால் இந்த திரைப்படத்தை நிராகரித்துள்ளார் அதற்கு காரணம் என்ன என்பதை சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது எனக்கும் இயக்குனர் அட்லிக்கும் இடையே கதையில் சில கருத்து வேறுபாடு இருந்தது அதனால்தான் இந்த திரைப்படத்தில் இருந்து விலகிக் கொண்டேன், இதை தவிர மற்றபடி எங்களுக்குள் எந்த பிரச்சினையும் கிடையாது என கூறியுள்ளார்.