என்னை எல்லாம் யார் பார்ப்பா என கூனி குறுகிய கோலிசோடா பட நடிகையை ஹீரோயின் ரேஞ்சிக்கு மாற்றிய மேக்கப் ஆர்டிஸ்ட்.!

இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான கோலி சோடா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் பசங்க திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் நடித்துள்ளார்கள் மேலும் இந்த திரைப்படத்தில் நான்கு சிறுவர்கள் கதாநாயகனாக நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல இந்த திரைப்படத்தில் இரண்டு முன்னணி கதாநாயகிகள் நடித்துள்ளார்கள் அதில் ஒருவர் தான் நடிகை சீதா. இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பலருக்கும் atm-ஆக பரிச்சியமானார் ஆனால் இந்த படத்திற்கு பிறகு பெரிதாக வேற ஒரு படத்தில் நடிக்கவில்லை.

அதன் பிறகு நடிகர் விக்ரம் மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான பத்து என்றதுக்குள்ள என்ற திரைப்படத்தில் சமந்தாவின் தோழியாக நடித்திருப்பார். இப்படி ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் நடிகை சீதா அனைவராலும் அறியப்பட்டது கோலிசோடா படத்தின் மூலம் தான்.

பெரிதாக எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை என்றாலும் இவரை பலரும் ஏடிஎம் என்று அழைத்து வந்தார்கள் இந்த நிலையில் நடிகை சீதா அவர்கள் கூறுகையில் நான் அழகாக இல்லாததால் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் கோலிசோடா படத்தில் நடிக்க தன்னுடைய சொந்தக்காரர்களிடம் கூறிய போது உன்னை எல்லாம் யாராவது நடிக்க கூப்பிடுவார்களா என்று கேலி செய்தார்கள்.

அது மட்டுமல்லாமல் இதெல்லாம் சினிமாவில் நடிக்க போவுது என்றால் நம்புறதா இது மூஞ்சி எப்படி இருக்கு என்று தன்னை பலரும் கேட்டார்கள் என்று கூறியிருக்கிறார். இப்படி சினிமாவில் நுழைவதற்கு முன்பே பல சங்கடமான கேள்விகளை எதிர்கொண்டு தான் சினிமாவிற்கு வந்திருக்கிறார் நடிகை சீதா.

இந்த நிலையில் நடிகை சீதா சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய போது சோகம் அளிக்கும் விஷயத்தை கூறியிருந்தார். அதாவது நடிகை சீதாவிடம் நீங்கள் ஏன் எந்த ஒரு பேட்டியும் கொடுக்கவில்லை என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சீதா நான் பார்க்க இப்படி இருக்கேன், அதுமட்டுமில்லாமல் நான் ஏடிஎம் தான என்று தாழ்வு மனப்பான்மையோடு கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் நடிகை சீதாவை பிரபல மேக்கப் ஆர்டிஸ்ட் ஒருவர் சீதாவிற்கு மேக்கப் போட்டுவிட்டு அவரை அழகு படுத்தியிருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதோ நடிகை சீதாவின் அழகிய புகைப்படம்…

seetha
seetha

Leave a Comment