தல அஜித் மிஸ் செய்து வேறொரு நடிகர் நடித்து மெகா ஹிட் ஆன திரைப்படங்கள்.!

நேற்று தல அஜித் பிறந்தநாளை கோலாகலமாக அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர் மேலும் தல அஜித்திற்கு சினிமாவில் உள்ள பல பிரபலங்களும் வாழ்த்துகளை கூறி தனது உடன் நடித்து வந்த திரைப்படங்கள் போன்ற தகவல்களைப் பற்றி பலரும் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு செய்திருந்தார்கள்.

சினிமாவில் தல அஜித் தனது திரைப்படம் ரசிகர்களுக்கு பிடிக்க வேண்டும் என்பதற்காக தனது இயல்பான நடிப்பை காட்டி இருப்பார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான் அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான எல்லா திரைப்படங்களும் பாதிக்கு பாதி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும்.

மேலும் தல அஜித் எந்த திரைப்படத்தில் நடித்தாலும் அந்த திரைப்படத்தின் கதை மிகவும் நன்றாக இருக்க வேண்டும் என யோசிப்பார் அதுமட்டுமல்லாமல் தல அஜித்தின் திரைப்பயணத்தில் இறுதியாக வெளியான நேர்கொண்டபார்வை ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் ரீதியாக சுமார் பல கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.இந்நிலையில் தல அஜித் நடிக்க மறுத்த திரைப்படங்களின் லிஸ்ட் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகியுள்ளது ஆம் அதை பற்றி தற்பொழுது பார்ப்போம்.

ஜீன்ஸ்:இந்த திரைப்படத்திற்கு கதாநாயகனாக அஜித்தை அணுகிய போது அந்த திரைப்படத்தில் ஒரு சில காரணங்கள் குறித்து அவரால் நடிக்க முடியவில்லை அவருக்கு பதிலாக தான் அதில் விஜய் நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

லவ் டுடே:இந்த திரைப்படத்திலும் அஜித்தை அணுகியபோது அவர் கால்சீட் காரணமாக விஜய்க்கு கொடுத்து விட்டாராம்.குஷி: இந்த திரைப்படத்தில் விஜய் அற்புதமாக நடித்திருப்பார் ஆனால் இந்தத் திரைப்படத்தையும் ஒரு சில காரணங்கள் குறித்து அஜித் நடிக்கவில்லையாம்.

ajith5

மேலும் காக்க காக்கக்,கஜினி,நான் கடவுள்,நியூ போன்ற பல திரைப்படங்கள் அஜித்தை தேடி வந்துள்ளது ஆனால் அவரால் இந்த திரைப்படங்களில் நடிக்க முடியவில்லை என்றுதான் கூறவேண்டும்.இதனையடுத்து இந்த தகவல் தற்போது அஜித் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Leave a Comment

Exit mobile version