அஜித்தை புகழந்த மீராமிதுன்!! அதற்காக விஜயயை தாக்குவதா…வைரலாகும் ட்வீட்.

0

meeramithun said about ajith:விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பிரபலமடைந்த நிகழ்ச்சிகளில் ஒன்று ஜோடி no1. இந்த ஜோடி டான்ஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மீரா மிதுன்.

அதன் பிறகு மிஸ் சவுத் இந்தியா போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தார். இந்நிகழ்ச்சியின் மூலம் இவருடைய உண்மையான முகம் அனைவருக்கும் தெரியவந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த இவர் இந்நிகழ்ச்சிக்குப் பிறகு பலர் மீது சர்ச்சையை ஏற்படுத்தி தற்போது சர்ச்சை நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தனது மிகவும் மோசமான கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் கடுப்பேற்றி வருகிறார்.

இந்த நிலையில் நாளிதழ் ஒன்றில் அஜித் வீட்டைவிட்டு எதற்கும் வெளியவே வர மாட்டார் என்று கூறப்பட்டது. எனவே தல அஜித்தின் ரசிகர்கள் பத்திரிகையாளர்களின் மீது கோபமாக இருந்து வந்த நிலையில் தற்போது மீராமிதுன் டுவிட்டரில் விஜய் போல கெத்தாக இசை வெளியீட்டு விழாவிற்கு வந்து விட்டு பின்பு மன்னிப்பு கேட்பவர் இல்லை அஜித்.

அவர் அமைதியாக எந்த ஒரு வம்பு தும்புக்கும் போகாமல் இருக்கும் உயர்ந்த மனிதர் என்று அஜித்தைப் பாராட்டி பதிவிட்டுள்ளார். எனவே அந்த பத்திரிக்கையாளரின் மீது இப்படிக் கூறியது மிகவும் தவறானது என்றும் கூறியிருந்தார். எனவே ரசிகர்கள் மீரா மிதுன் அட்வைஸ் செய்யும் அளவிற்கு கேவலமா ஆகிடோமா என கடுப்பில் இருந்து வருகிறார்கள்.