விஜய் பற்றி பேசினால் வேலைக்காகாது என்று சர்ச்சைக்குரிய புகைப்படத்தை வெளியிட்டு பிரபல இயக்குனர் மற்றும் டான்ஸ் மாஸ்டரை வம்புக்கு இழுக்கும் மீரா மிதுன்!!. ட்ரோல் ஆகும் மீரா மிதுனின் புகைப்படம்.

0

meera mithun troll photos:பிக்பாஸில் இருந்து வெளிவந்ததும் தான் நினைத்தது எதுவும் நடக்காததால்  தொடர்ந்து சர்ச்சை எழுப்பி வருகிறார் நடிகை மீரா மிதுன். இவர் தன்னை பிரபலப்படுத்தி கொள்வதற்காக தனது ஹாட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு அதன் மூலம் பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்தார் .

ஆனால் வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் அந்த விரக்தியில் தொடர்ந்து ஏதாவது சர்ச்சையை எழுப்பி வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு நடிகர் விஜய் மற்றும் சூர்யாவைப் பற்றி சர்ச்சையை எழுப்பி வந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் அவர்களின் ரசிகர்கள் மீரா மிதுனை சமூகவலைதளங்களில் வச்சி செய்தனர்.

அவர்களைத் தொடர்ந்து மீரா மிதுன் அவர்களது மனைவியை கண்டபடி கெட்ட வார்த்தையால் திட்டி சர்ச்சையை எழுப்பினார். மீரா மிதுனை பற்றி பெரிதாக யாரும் கண்டுகொள்ளாததால் கடுப்பாகி தற்போது புதிய பிரச்சனை உருவாக்கியுளளார்.

அதாவது தனக்கு பிக் பாஸ் வீட்டில் நடந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைத்தால் தான் தற்போது நடக்க இருக்கும் பிக்பாசை நடத்த விடுவேன் என சபதம் எடுத்துள்ளாராம். பிரச்சனை என்னவென்றால் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது சேரன் தனது இடுப்பில் கை வைத்ததாகவும் அதற்கு சாட்சி சாண்டி எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

அந்த புகைப்படத்தை  தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த சேரனின் ஆதரவாளர்கள் மீரா மிதுனை சகட்டுமேனிக்கு ட்ரோல் செய்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.