‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் அம்மாவாக நடித்து வரும் கோதை இவ்வளவு சிறியவரா.! தீபக்கை விட வயது குறைவு..

Thamizhum Saraswathiyum: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் அம்மா ரோலில் நடித்து வரும் கோதை தமிழை விட குறைவு என கூறப்படுகிறது. சமீப காலங்களாக சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரையிலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும் மக்களின் ஆதரவுடன் டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது. தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அம்மாவாக கோதை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை மீரா கிருஷ்ணன்.

சரியான நேரம் பார்த்து பாக்கியாவை திட்டும் ஈஸ்வரி.. அமிர்தா பற்றி கணேஷ் -க்கு தெரிந்த உண்மை – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

மகனாக நடித்து வரும் தீபகைவிட சில வயது சிறியவர் இருப்பினும் மீரா அம்மாவாக நடித்து வரும் நிலையில் தற்போது தான் இவருக்கு 36 வயது ஆகிறது. வயது குறைவாக இருந்தாலும் கோதை கதாபாத்திரம் இவருக்கு கச்சிதமாக பொருத்தமாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் சித்தி 2 நாயகி, வந்தால் ஸ்ரீதேவி உள்ளிட்ட பல சீரியல்களில் அம்மா மற்றும் மாமியார் கேரக்டரில் சிறப்பாக நடித்து வருகிறார்.

நடிகை மீரா கேரளாவில் பிறந்து தனது மூன்று வயதிலேயே சினிமா பயணத்தை தொடர்ந்தார். மார்க்கம் என்ற மலையாள படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவருக்கு தொடர்ந்து ஏகப்பட்ட திரைப்படங்களின் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. ஒரு கட்டத்தில் நடிப்பை நிறுத்திவிட்டு படிப்பில் கவனம் செலுத்தி வந்த மீரா பிறகு படிப்பை முடித்தவுடன் மீண்டும் நடிக்க தொடங்கினார்.

மூர்த்தியை தள்ளிவிட்டு தப்பித்து ஓடிய பிரசாந்த். வீடியோ ஆதாரத்தை காட்டியும் ஜாமீன் கொடுக்காத கோர்ட்.! பரபரப்பின் உச்சத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ்

அந்த வகையில் சமீப காலங்களாக தொடர்ந்து சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்து வருகிறார் மீரா. இதற்கு முன்பு மீரா கிருஷ்ணன் பல படங்கள், சீரியல்களில் நடித்திருந்தாலும் தமிழும் சரஸ்வதியும் சீரியல்தான் மக்கள் மத்தியில் பிரபலத்தை பெற்று தந்தது. இந்த சீரியலில் நடிகர் தீபக்கு அம்மா கேரக்டரில் நடித்து வரும் நிலையில் தீபகை விட வயது குறைந்தவர் மீரா என கூறப்படுகிறது.