சேரனை அடுத்து சிவகார்த்திகேயனை அசிங்கப்படுத்திய மீரா மிதுன்.! ரசிகர்கள் ஆவேசம்

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் 17 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் மீரா மிதுன். இவர் எப்பொழுதும் ஏதாவது ஒன்று கூறி சர்ச்சையில் சிக்கிக் கொள்வார் அப்படிதான் பிக் பாஸ் 3 வது சீசனில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. என்று கூறுகிறார்கள் ஒரு தரப்பு மக்கள்.

பிக்பாஸில் கூட சேரன் தன்னை தவறான இடத்தில் கை வைத்து விட்டார் எனக் கூறி அசிங்கப்பட்டு மக்களால் வெளியேற்றப்பட்டார், இதுமட்டுமில்லாமல் மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்ற இவர் அழகிப்போட்டி நடத்துவதாக கூறி பலரிடம் ஏமாற்றி பணம் பறித்துள்ளார், அதுமட்டுமில்லாமல் இவரின் மேனேஜரை கொலை செய்வதாக மிரட்டி ஆடியோ கூட வெளியானது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனை பற்றிய தற்பொழுது அவதூறாக பேசி மீண்டும் சர்ச்சையை சந்தித்து வருகிறார், அதாவது இவர் பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன் நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடித்து விட்டும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி விட்டும் சென்றுள்ளதாக கூறினார்.

ஆனால் அந்த காட்சிகளை படத்திலிருந்து நீக்கி விட்டதாகவும் ஏன் என்று கேட்டதற்கு நீங்கள் விஜய் தொலைக்காட்சிக்கு சென்றதால் தான் அவ்வாறு செய்தோம் என்று தயாரிப்பு தரப்பு கூறியதாகவும், அதற்கு மீராமிதுன் விஜய் டிவியில் இருந்து வந்தவர் தானே சிவகார்த்திகேயன் எனக்கூறி. பாண்டிராஜ் மற்றும் தயாரிப்பு தரப்பை விமர்சனம் செய்து வருகிறார் மீரா மிதுன்.

இதைப்பார்த்த ரசிகர்கள் எதுக்குமா இந்த பொழப்பு உங்களுக்கு என கேவலமாக மீராமிதுனை பார்த்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.