விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் 17 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் மீரா மிதுன். இவர் எப்பொழுதும் ஏதாவது ஒன்று கூறி சர்ச்சையில் சிக்கிக் கொள்வார் அப்படிதான் பிக் பாஸ் 3 வது சீசனில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. என்று கூறுகிறார்கள் ஒரு தரப்பு மக்கள்.
பிக்பாஸில் கூட சேரன் தன்னை தவறான இடத்தில் கை வைத்து விட்டார் எனக் கூறி அசிங்கப்பட்டு மக்களால் வெளியேற்றப்பட்டார், இதுமட்டுமில்லாமல் மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்ற இவர் அழகிப்போட்டி நடத்துவதாக கூறி பலரிடம் ஏமாற்றி பணம் பறித்துள்ளார், அதுமட்டுமில்லாமல் இவரின் மேனேஜரை கொலை செய்வதாக மிரட்டி ஆடியோ கூட வெளியானது.
இதைத்தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மீராமிதுன், தனது சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.
இதனால், பிக்பாஸ் ஜூலியையும் மீராமிதுன் தாண்டிவிட்டார் என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். இதற்கிடையில், மீராமிதுன் கையில் பியர் கிளாஸ் வைத்திருப்பது போன்று ஒரு புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Its @bira91 time for @meera_mitun pic.twitter.com/zFWP4wwyzs
— kaul brahmin (@bismivalaipechu) October 12, 2019