ஒரு 2000 அனுப்பு, பணம் கேட்டு கெஞ்சோ கெஞ்சுன்னு கெஞ்சியுள்ள மீரா மிதுன்.! ஆதாரத்தை வெளியிட்ட ஜோ மைக்கேல்

joe micheal
joe micheal

meera mithun text screenshot leaks by joe micheal : சமூக வலைதளத்தில் கடந்த சில நாட்களாகவே மீராமிதுன் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறார், புகழின் ஆசைக்காக முன்னணி நடிகர்களை விமர்சித்து அதில் ஆதாயம் தேடி வருகிறார். இவர் பிக்பஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுதும் இப்படிதான் யார் மீதாவது  விமர்சனங்களை வைத்து அசிங்கப்படுத்தி கொள்வார்.

அதுமட்டுமில்லாமல் மீரா மிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே இவர் மீது போலீசில் புகார் கொடுத்து இருந்தார்கள், ஆம் ஜோ மைக்கல் என்பவர் மீராமிதுன் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார், அதுமட்டுமல்லாமல் ஜோ மைக்கல் அடிக்கடி பல பேட்டிகளில் மீரா மிதுன் மீதும் பெண்களை தரக்குறைவாக பேசியதால் பெண்கள் அமைப்பினர் சார்பில் ஜோ மைக்கல் மீது புகார் மனு அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் அடிப்படையில் ஜோ மைக்கல் அடையாறு போலீஸ் நிலையத்திற்கு சரணடைய வேண்டும் என மூன்று முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது, ஆனால் ஜோ மைக்கல் ஆஜராகவில்லை அதனால் விசாரணைக்காக பெண் போலீசார் அனுப்பி வைத்துள்ளார்கள். ஆனால் அவர்களை ஜோ மைகேல் இழிவாக பேசியதாகவும் மிரட்டல் விட்டதாகவும் ஜோ மைக்கேலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

தற்பொழுது சிறையில் இருந்து வெளிவந்துள்ள ஜோ மைக்கல் மீராமிதுன் ஆட்டத்தை பொறுக்கமுடியாமல் மீரா மிதுன் குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார் சமூக வலைத்தளத்தில். அந்தவகையில் மீராமிதுன் யாரோ ஒருவரிடம் பணம் கேட்டு டெக்ஸ்ட் செய்ததுபோல் ஸ்க்ரீன் ஷாட்டை ஜோ மைக்கல் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அந்த ஸ்கிரீன் ஷாட்டில் அந்த நபரிடம் தன்னால் இப்பொழுது வெளியே வர முடியாது எனவும் தனக்கு 2000 ரூபாய் அனுப்பி விடுமாறு கெஞ்சியுள்ளார்.

இந்த ட்விட் இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.