சூப்பர் மாடலாக இருந்த மீரா மிதுன் சிறையிலிருந்து வெளியே வந்த பின் இப்பொழுது இப்படி மாறிவிட்டாரே.! வைரலாகும் வீடியோ

நடிகை மீரா மிதுன் 2016 மிஸ் தென்னிந்திய போட்டியில் கலந்துகொண்டு வெற்றியாளராக மாறினார் இந்த போட்டியின் 15 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக வென்ற சென்னை பெண் என்ற அந்தஸ்தை அடைந்தார் இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதுமட்டுமில்லாமல் தானாசேர்ந்தகூட்டம் திரைப்படத்திலும் நடித்து இருந்தார்.

அதன்பிறகு எப்படியாவது சினிமாவில் நடித்து பேரும் புகழும் அடைய வேண்டுமென விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் பல போட்டியாளர்கள் இவர்களுடன் கலந்து கொண்டார்கள் ஆனால் மீராமிதுன் தன்னுடைய ஆணவத்தால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

மேலும் இவர் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் ஏதாவது ஒரு வீடியோ அல்லது கருத்தை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொள்வார் அந்த வகையில் சமீபத்தில் விஜய்யை வைத்து விமர்சனம் செய்து அதில் இருந்து ஆதாயம் தேடி பார்த்தார் ஆனால் அது நடக்கவில்லை பின்பு ஏதாவது ஒரு சர்ச்சையை கிளப்பி கொண்டே இருந்தார்.

அந்த வகையில்  ஒரு சமூகத்தை மிகவும் தரக்குறைவாக பேசி வீடியோவை வெளியிட்டு பெரும் சர்ச்சையில் சிக்கினார். ஒரு சமூகத்தை அவதூறாக பேசி புகாரில் கைது செய்யப்பட்டவர் மீராமிதுன் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஒரு சமூகத்தை தரக்குறைவாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் மீராமிதுன் மீது பலரும் புகார் ஒன்றை அளித்தார். அதற்கு மீராமிதுன் போலீஸ் என்னை கைது செய்ய முடியாது எனவும் மிகவும் சவால் விட்டார். இந்த நிலையில் கேரள ஹோட்டலில் இருந்த மீராமிதுன் போலீசார் அதிரடியாக கைது செய்தார்.

மீரா மிதுன் தன்னை கைது செய்த போலீஸிடமும் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்தார் அதேபோல மீராமிதுன் எது செய்தாலும் அவர் செய்வது தவறு என்பதை சுட்டிக் காட்டாமல் அவருக்கு உறுதுணையாக இருந்த அவரின் நண்பர் மீரா மிதுன் வீடியோவை வெளியிட்டு வந்தார் அதனால் அதன் குற்றத்திற்காக அபிஷேக்கும் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் மீராமிதுன் மீண்டும் ஜாமீன் கேட்டு அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர்.

அவர் கூறியதாவது 35 நாட்களுக்கு மேலாக சிறையில் இருப்பதாகவும் கொரோனா காரணமாக தடுப்பூசி போட்டுக் கொண்டது சோர்வு ஏற்பட்டுள்ளதால் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார் இதை ஏற்ற நீதிபதி மீராமிதுன் மற்றும் அவருடைய நண்பர் அபிஷேக் அவர்களுக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது. இந்த நிலையில் கிட்டத்தட்ட 40 நாட்கள் கழித்து சிறையிலிருந்து மீராமிதுன் வெளியே வந்துள்ளார்.

இவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கைது செய்யும்பொழுது மிகவும் சவாலாக பேசிய மீராமிதுன் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு எந்த ஒரு பேச்சும் இல்லாமல் மிகவும் அமைதியாக தலையில் முக்காடு போட்டுக்கொண்டு மிகவும் அமைதியாக காரில் ஏறி சென்றுள்ளார் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave a Comment