மீரா மிதுன் வாயை ஒரே பதிவில் மூடிய சூர்யா.! சரியான பதிலடி இதுக்கு மேல பேசுவ ரசிகர்கள் கேள்வி.?

suriya tweet meera mithun issue : நடிகை மீரா மிதுன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சேரன் மீது அப்பட்டமாக பழி சுமத்தினர், அது இன்றுவரை விமர்சனங்களாக இருக்கிறது.

இந்தநிலையில் மீரா மிதுன் சமீபகாலமாக முன்னணி நடிகர்களை தரக்குறைவாக பேசி பிரபலம் அடைய நினைக்கிறார். அதனால் ரசிகர்கள் அவரை கேவலமாகத் திட்டி தீர்க்கிறார்கள். சமீபத்தில் கூட விஜயின் மனைவி சூர்யாவின் மனைவி என இருவரையும் மிகவும் கேவலமான தகாத வார்த்தையால் பேசி அசிங்கப் படுத்தி உள்ளார்.

இதற்கு சூர்யா மற்றும் விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அஜித் ரசிகர்களும் இணைந்து தக்க பதிலடி கொடுத்து வந்தார்கள், ஆனால் மீராமிதுன் அடங்குவது போல் தெரியவில்லை. பிறகு ஜோ மைக்கேல் என்பவர் மீரா மிதுன் லீலைகள் தன்னிடம் இருப்பதாகவும் தினமும் ஒரு வீடியோவாக வெளியிடுவதாகவும் கூறினார்.

அந்த வகையில் சமீபத்தில் மீரா மிதுன் இரண்டு ஆண்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார் அதுமட்டுமில்லாமல் அடுத்ததாக ஆண் ஒருவருடன் ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோ இணையத்தில் படுவேகமாக வைரலாகி வந்தது.

இந்த நிலையில் மீரா மிதுனுக்கு பாரதிராஜா கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார், இப்படி பல சினிமா பிரபலங்கள் மீராமிதுனை  வெளுத்து வாங்கி வருகிறார்கள். ஆனால் இதன் சம்பந்தப்பட்ட இருவரும் வாயை திறக்காமல் அமைதியாக இருந்ததுதான் கொஞ்சம் கவலை அளிக்கக் கூடிய விஷயமாக இருந்தது..

இந்த நிலையில் முதன் முறையாக சூர்யா மீரா மிதுன்  அவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார், நடிகர் சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய ரசிகர்களுக்காக ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி தரத்தை நாம் குறைத்துக்கொள்ள வேண்டாம் உங்களின் நேரத்தையும் சக்தியையும் பயனுள்ள சேவைகளுக்கு செலவிடுங்கள் சமூகம் பயன்பெற என அறிக்கையில் அதிரடியாக கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் பாரதிராஜாவின் அந்த அறிக்கைக்கு  நன்றியும் கூறியுள்ளார் நடிகர் சூர்யா. எனது தம்பி தங்கைகளே நேரமும் சக்தியும் ஆக்கபூர்வமான செயல்களுக்கு பயன்பட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள் என கூறியுள்ளார்.

suriya-tweet-about-meera-mithun-issue
suriya-tweet-about-meera-mithun-issue

Leave a Comment