இதுக்கு நீங்க டிரஸ் போடாமலேயே இருக்கலாம் ரசிகர்களின் பதிவிற்கு மீரா மிதுன் கொடுத்த பதிலடி.!

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் சர்ச்சை சூறாவளி என்றால் அது மீராமிதுன் தான், இவர் விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது சேரன் மீது அபாண்டமாக இடுப்பை பிடித்தார் என பழி போட்டார்.

ஆனால் இதற்கு சக போட்டியாளர்கள் மறுப்பு தெரிவித்தார்கள், அதன்பிறகு நான் அப்படி கூறவே இல்லை என பல்டி அடித்தார், பிக் பாஸ் வீட்டிற்கு சென்று வந்தால் பல நடிகைகளுக்கு பட வாய்ப்பு அதிகரிக்கும் ஆனால் மீராமிதுனுக்கு அப்படியே உல்டாவாக மாறிவிட்டது, அவருக்கு இதுவரை எந்த ஒரு பட வாய்ப்பும் பெரிதாக அமையவில்லை,

சில திரைப்படங்களில் கமிட்டானார் ஆனால் இயக்குனர்கள் அவரை நிராகரித்து விட்டார்கள், இதனால் கடுப்பான மீரா மிதுன் அதனை வெளியே காட்டாமல் தொடர்ந்து பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஆனால் அவர் வெளியிடும் ஒவ்வொரு புகைப்படமும் மோசமான கவர்ச்சி புகைப்படங்கள் தான்.

அதனால் அவரின் புகைப்படத்தை பார்த்து கண்டமேனிக்கு ரசிகர்கள் திட்டுவார்கள், இந்த நிலையில் இதைப் பற்றி பேசிய மீரா மிதுன் தென்னிந்தியாவிலிருந்து மாடலிங்கில் யாரும் அதிகம் செல்லாததற்கு காரணம் நமது கலாச்சாரம் தான் அதை நானும் மதிக்கிறேன்.

இதுபோல் எக்ஸ்போஸ் பண்ணக் கூடாது எனவும் அழகை திறந்து காட்ட கூடாது எனவும் நினைக்கிறேன், எங்க அப்பா ஒரு பாடிபில்டர் மிஸ்டர் மெட்ராஸ் வின் பண்ணினார், அவர் எனக்கு சுதந்திரம் கொடுத்தார் அதனால் நானும் எக்ஸ்போஸ் பண்ணினேன் என அதிரடியாக கூறினார்.

மேலும் எனது புகைப்படத்தை பார்த்துவிட்டு சிலர் இதற்கு ட்ரஸ் போடாமலேயே போஸ் கொடுக்கலாம் என கமெண்ட் செய்வார்கள், இதையெல்லாம் பார்த்து எனக்கு பழகிவிட்டது அதை அனைத்தையும் இக்நோர் செய்து விடுவேன் என கூறினார்.

Leave a Comment