புசுபுசுவென இருந்த மீரா ஜாஸ்மினா இது.! ப்பா என்ன ஒரு மாற்றம்.! வைரலாகும் புகைப்படம்

0

மலையாளத்திலிருந்து வரும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது, நயன்தாரா முதல் சாய்பல்லவி வரை பல நடிகைகள் மலையாள சினிமாவில் இருந்து வந்தவர்கள்தான். அந்தவகையில் 2002 ஆம் ஆண்டு வெளியான ரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின் இந்த திரைப்படத்தின் மூலம் பல இளசுகளின் மனதில் கனவுக்கன்னியாக குடியேறியவர்.

1982ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர், தான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது தனது ஊரில் திருவல்லாவில் மலையாள படத்தின் சூட்டிங் நடைபெற்றது. அப்பொழுது தனது தோழிகளுடன் சூட்டிங் பார்க்க சென்றார் மீராஜாஸ்மின், அந்த ஷூட்டிங்கில் மீரா ஜாஸ்மினை பார்த்து ஒரு இயக்குனர் தன்னுடைய அடுத்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறியா என கேட்டுள்ளார், அவர் அப்படிக் கேட்டதும் மீராஜாஸ்மின்னுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது மீரா ஜாஸ்மினும் சரி என சொல்லி விட்டார்.

2001 ஆம் ஆண்டு வெளியான சூத்தராதாரன் என்ற திரைப்படத்தில் சினிமா துறைக்கு அறிமுகமானார் மீரா ஜாஸ்மின். அதன்பிறகு மீராஜாஸ்மின் தமிழில் ரன், புதியகீதை, ஆஞ்சநேயா, ஆயுத எழுத்து, மெர்குரி பூக்கள், பரட்டை என்கிற அழகுசுந்தரம் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான அஜித் விஜய் உடன் நடித்துள்ளார்.

இந்த நிலையில் பிரபல தொழிலதிபரான ராஜேஷ் என்பவரை திருமணம் செய்து கொள்வதாக இருந்தது, ஆனால் 2014ஆம் ஆண்டு தனது 32 வயதில் துபாயை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் அனில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார் பின்பு 2016ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார், அதன் பின்பு தொடர்ந்து நடித்து வந்த மீரா ஜாஸ்மின் உடல் எடை அதிகரித்ததால் நடிப்பதை நிறுத்தி விட்டார்.

meera-jasmin
meera-jasmin

தற்பொழுது மீண்டும் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார், அதன் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன மீண்டும் சினிமாவில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

meera-jasmin
meera-jasmin