நடிகை மீராஜாஸ்மின் தமிழ் மட்டுமல்லாமல் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். ஆனால் தமிழில் முதன் முதலாக 2002ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியாகிய ரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதன் பிறகு நடிகர் விஜய், அஜித், தனுஷ், விஷாலுக்கு மாதவன், எஸ்ஜே சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார்.
அதிலும் இவர் நடிப்பில் வெளியாகிய சண்டக்கோழி திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடிக் கொடுத்தது இந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது அதனால் இவருக்கு அடுத்த பட வாய்ப்பும் அமைந்தது. என்னதான் இவருக்கு சண்டக்கோழி திரைப்படம் வெற்றி திரைப்படமாக அமைந்தாலும் ஒரு காலகட்டத்தில் இவர் சினிமாவை தவிர்த்து வந்தார்.
பிறகு திருமணம் செய்து கொண்டு சினிமாவில் சுத்தமாக நாட்டமில்லாமல் குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். பல நடிகைகள் திருமணம் செய்து கொண்டாலும் சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது தலை காட்டுவார்கள் ஆனால் மீரா ஜாஸ்மின் சமூக வலைத்தளத்திலும் பெரிதாக எந்த ஒரு அப்டேட் இடம் இல்லாமல் இருந்தார்.

இவர் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக சமூக வலைதள பக்கம் தலை காட்டாமல் இருந்து வந்துள்ளார் இந்த நிலையில் மீரா ஜாஸ்மின் ஐந்து வருடங்களுக்கு பிறகு மிகவும் ஃபிட்டாக இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் இளமையாக தோற்றம் அளிக்கிறார். மலையாளத்தில் புதிய திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் இவர் சமூக வலைதள பக்கமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் தொடர்ந்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் இவருக்கு பலத்த வரவேற்பு கொடுத்துள்ளார்கள் இந்த நிலையில் இவர் ஒரு புதிய புகைப்படம் ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
