9 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரீ என்ட்ரி… அதுவும் நயன்தாராவுக்கே வில்லியாகும் பிரபல நடிகை..!

90 காலகட்டத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின் பொதுவாக கேரளாவில் இருந்து வரும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் பல நடிகைகளை உதாரணமாக கூறலாம். அந்த வரிசையில் நடிகை மீரா ஜாஸ்மின் அவர்களும் ஒருவர்.

இவர் முதன்முதலாக நடிகர் மாதவனுடன் ஜோடியாக நடித்த முதல் திரைப்படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை நிலைநாட்டினார் இவருக்கு அடுத்தடுத்த திரைப்படங்கள் கிடைத்தன தன்னுடைய துரு துரு என நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து வந்த மீராஜாஸ்மின் ஒரு காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கண்ணியாக வலம் வந்தார்.

மீரா ஜாஸ்மின் நடிப்பில் வெளியாகிய பாலா, புதிய கீதை, ஆஞ்சநேயா, ஜூட், ஆயுத எழுத்து, கஸ்தூரிமான், சண்டைக்கோழி, திருமகன், பரட்டை என்கின்ற அழகு சுந்தரம், நேபாளி என பல திரைப்படங்களில் நடித்தார். இவர் 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு சினிமாவில் பெரிய அளவில் தலைகாட்டாமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் விக்ரம் வேதா, மண்டேலா ஆகிய திரைப்படங்களை தயாரித்த தயாரித்த ஒய் நாட் ஸ்டூடியோ தயாரிப்பில் நடிகர் மாதவன், நடிகர் சித்தார்த், நடிகை நயன்தாரா ஆகியோர்கள் இணைந்து நடிக்கும் திரைப்படமான டெஸ்ட் திரைப்படத்தில் நடிகை மீரா ஜாஸ்மின் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

மீரா ஜாஸ்மின் சுமார் பல ஆண்டுகள் கழித்து மாதவன் நடிக்கும் திரைப்படத்தில் நடிக்க இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் வில்லி ரோலில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் நிலையில் 90ஸ் கனவு கன்னியாக ஜொலித்து வந்த மீராஜாஸ்மின் கமிட்டாகியுள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Meera-Jasmine
Meera-Jasmine

Leave a Comment