மலர் டீச்சரை விட, மீனாட்சி டீச்சர் சூப்பர்.! தியேட்டரை தெறிக்கவிடும் வாத்தி படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ…

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படம் இன்று திரையில் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனத்தை தற்போது நாம் பார்க்க இருக்கிறோம். தெலுங்கு திரைப்பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உருவாகி இன்று வெளியாகி இருக்கிறது.

இதனை தொடர்ந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை தனுஷின் வாத்தி திரைப்படம் பூர்த்தி செய்ததா இல்லையா என்று தற்போது நாம் பார்ப்போம். சமீபத்தில் வாத்தி திரைப்பட ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் ஏகபோக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் இன்று வெளியான வாத்தி திரைப்படத்துடன் தனுஷின் அண்ணன் செல்வராகவன் நடிப்பில் உருவாகியுள்ள பாகாசுரன் திரைப்படமும் இன்று வெளியாகி இருக்கிறது அந்த வகையில் அண்ணனும் தம்பியும் முதன் முறையாக திரையில் மோதிக்கொண்ட முதல் திரைப்படமாக இந்த திரைப்படம் அமைந்திருக்கிறது. இதனால் இந்த இரண்டு படங்களின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருந்தது.

அந்த வகையில் இன்று வெளியான பாகசுரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது இதனை தொடர்ந்து தற்போது வாத்தி திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

இதனை தொடர்ந்து தற்போது தனுஷ் அவர்கள் தனது அண்ணனை ஜெயித்தாரா இல்லையா என்று ட்விட்டர் விமர்சனத்தில் பார்ப்போம்.

இதோ twitter விமர்சனம் :- வாத்தி படத்தின் முதல் பாதி ரொம்பவே ஆவ்றேஜகா இருந்தது இரண்டாவது பாதி நன்றாக இருந்தது என்று ஒரு ரசிகர் விமர்சனம் கொடுத்திருக்கிறார். இதனை தொடர்ந்து ஜிவி பிரகாஷின் இசை வாத்தி திரைப்படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது என்று கூறியுள்ளனர்.

மேலும் மீனாட்சி டீச்சர் சூப்பர். அவங்களுடைய கதாபாத்திரத்தில் சம்யுக்தாவின் நடிப்பும் அவரது அழகும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. பிரேமம் மலர் டீச்சருக்கு பிறகு மீனாட்சி டீச்சர் தான். கண்டிப்பா இந்த படம் பிளாக்பஸ்டர் என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

vaathi
vaathi
vaathi
vaathi
vaathi
vaathi

Leave a Comment