தற்போது திரையுலகில் தியேட்டரில் வெளியாகும் திரைப்படங்களை விட இணையத்தில் வெளியாகும் திரைப்படங்கள் தான் அதிகம் அந்த வகையில் அமேசான் நெட்பிளிக்ஸ் ஹாட்ஸ்டார் zee5 என பல்வேறு இணையதள செயலிகள் திரைப்படங்களை வெளியிட முன்னுரிமை கொடுத்து வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் தளத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்ற ஒரு திரைப்படம் வெளியானது இத்திரைப்படத்தைப் கரன் ஜோகர் என்பவர்தான் தயாரித்திருந்தார் இவ்வாறு இவர் ஒரு மிகப் பெரிய தயாரிப்பாளர் என்பதன் காரணமாக இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாக இருந்தது.
ஆனால் இத்திரைப்படம் வெளியான உடன் ரசிகர்கள் இத்திரைப்படத்தை பார்த்து படு மொக்கையாக இருக்கும் என விமர்சனம் செய்து வருகிறார்கள். ஆனால் இந்திய அளவில் நெட்பிலிக்சில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. பொதுவாக தென்னிந்திய காரர்கள் தமிழர்கள் திரைப்படம் ஒரு சில நிமிடம் ஓடினாலே அவர்கள் கடுப்பாகி விடுவார்கள்.
இதற்கு முக்கிய காரணம் மொழி உச்சரிப்பு, உறவுகளின் சித்தரிப்பு, கலாச்சாரம் ஆகியவைகள் தான் அந்தவகையில் இத்திரைப்படத்தில் என்னதான் அப்படி சொதப்பலாக இருக்கிறது என ரசிகர்கள் அதனை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தில் கதாநாயகனுக்கு குடும்ப பிசினஸ் பிடிக்காததன் காரணமாக எப்படியாவது ஐடி ஊழியர் ஆக வேண்டுமென துடித்துக் கொண்டிருப்பாள் அப்பொழுது இவருக்கு பெண் பார்ப்பதற்கான வேலை நடந்து கொண்டிருந்தது அச்சமயம் பார்க்க போன பெண்ணின் வீட்டிற்கு செல்லாமல் மீனாட்சி வீட்டிற்கு சென்று விடுகிறார்.
பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து முதலிரவு நடப்பதற்கு முன்பாகவே நமது ஹீரோவுக்கு பெங்களூரில் வேலை கிடைத்து விட்டது ஆனால் அந்த வேலை பேச்சுளராக இருந்தால் மட்டுமே கொடுக்கப்படும் என கூறிவிட்டார்கள்.

இதன் காரணமாக தனக்கு திருமணமானதை மறைத்து விட்டு நமது ஹீரோ வேலைக்கு செல்ல ஆரம்பிக்கிறார் பின்னர் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது ஆனால் நமது ஹீரோ சம்பாதித்து விட்டு அதன் பிறகு தன் மனைவியை தேடி மதுரைக்கு வருகிறார் அப்போது தர்பார் திரைப்படத்தின் முதல் காட்சியில் இந்த இருவரும் ஒன்று சேர்கிறார்கள். இதுதானே திரைப்படத்தின் கதை இப்படி ஒரு கதை யாருக்கு தான் பிடிக்கும்.