கமலுடன் முக்கிய திரைப்படத்தில் நடிக்க இருந்த மீனா.! அதுவும் எந்த திரைப்படத்தில் தெரியுமா.?

0

தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தற்போது முன்னணி நடிகையாக விளங்கி வரும் நடிகை தான் மீனா இவர் தமிழில் குழந்தை நட்சத்திரமாக காலடி எடுத்து வைத்தாலும் இவர் நிறைய திரைப்படங்களில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன்,அஜித் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார் என்றுதான் கூற வேண்டும்.

மேலும் இவர் சினிமாவில் நிறைய  திரைப்படங்களில் நடித்தாலும் ரஜினி,கமல் போன்ற நடிகர்களுடன் நடித்த அனைத்து திரைப்படங்களும் இவருக்கு வெற்றியை தந்துள்ளது மேலும் இவரது நடிப்பில் தற்போது ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வருகிறது அதுமட்டுமல்லாமல் இவர் ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ரீமேக் போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இவர் ரஜினியுடன் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்பது பற்றி பலரும் பல கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் இவரைப் பற்றி ஒரு புதிய தகவல் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் கமலுக்கு ஜோடியாக மீனா நடிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல்  வெளியானது.

kamal
kamal

இந்நிலையில் சமூக வலைதளங்களில் சமீபத்தில் மீனாவிடம் கலந்துரையாடிய ரசிகர்கள் பலவிதமான கேள்விகளை எழுப்பினார்கள் அதில் ஒரு ரசிகர் பாபநாசம் 2வில் நீங்கள் நடிப்பீர்களா என கேட்டுள்ளார் அதற்கு பதிலளித்துள்ள மீனா இந்த விஷயத்தை நீங்கள் கமலிடம் தான் கேட்க வேண்டும் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் மேலும் இவர் பகிர்ந்த பதிவானது தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.