புறா எச்சத்தால்.. ஆசை கணவனை இழந்த மீனா.! மர்மங்களுக்கு மேல் மர்மம்.

meena-
meena-

அண்மைக்காலமாக சினிமா துறையைச் சார்ந்தவர்கள் மற்றும் அவர்களது நெருங்கியவர்கள் பலரும் உயிரிழந்து வருவது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கிறது அப்படித்தான் தற்போதும் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.  தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு ரஜினியின் முத்து.

படத்தின் மூலம் சினிமா உலகில் கால் தடம் பதித்தவர் நடிகை மீனா. இவர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டு 13 வருடங்கள் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார் இவர்கள் இருவருக்கும் நைனிகா என்ற மகள் உள்ளார். குடும்பம் சினிமா என சிறப்பாக வாழ்ந்து வந்த இவர்களது குடும்பத்தில் தற்பொழுது ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளது.

ஆம் மீனாவின் கணவர் வித்தியாசாகர் தற்பொழுது உடல்நலக்குறைவால் உயிர் இழந்து உள்ளார் அவர் எதனால் உயிர் இழந்தார் என்பது குறித்து விலாவாரியாக பார்ப்போம். வித்யாசாகர் கொரோனா தோற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருந்தார் அப்போது அவரது உடலை பரிசோதிக்கும்போது நுரையீரல் பிரச்சனை இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து தொடர்ந்து மருத்துவரை பார்த்து வந்துள்ளனர் இருப்பினும் நுரையீரலில் பிரச்சனை அதிகமாகிக் கொண்டே போனதால் அவரது உடல்நிலையும் ரொம்ப பலவீனம் ஆகியது இந்த நிலையில் அவர் புறாவின் கழிவுகளில் ஏற்படும் கிருமிகள் அவரது சுவாசக் குழாயை மேலும் பாதிப்படைத்தது இதனால் வித்யாசாகரின் இரண்டு நுரையீரல்களும் பாதிக்கப்பட்டு இருந்ததால் அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து காத்திருந்தனர்.

ஆனால் அதற்குள்ளே அவரது உடல்நிலை மோசமாகி நேற்று மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது. உடல் பலவீனமானவர்கள் அல்லது நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் புறா எச்சத்தால் வரும் கிருமிகளின் மூலம் அவரது நுரையீரல்கள் பாதிக்கப்படும் என தெரியவருகிறது. இதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முக கவசம் மற்றும் இது போன்ற இடங்களில் இருந்து சற்று தள்ளி தனது உடலை பாதுகாத்துக் கொள்வதே சிறந்தது என சொல்லப்படுகிறது.