துயரத்தின் பிடியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீளும் மீனா – தோழிகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்.!

90 கால கட்டங்களில் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை மீனா. முதலில் இவர் குழந்தை நட்சத்திரமாக ரஜினி படத்தில் நடித்தார். பின்பு அவரது முத்து படத்திலேயே ஹீரோயின் ஆக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் அவர் தேர்ந்தெடுத்து நடித்த ஒவ்வொரு திரைப்படமும் வெற்றி படமாக மாறியதால் இவரது மார்கெட் அசுர வளர்ச்சியை எட்டியது.

மேலும் இவருக்கென ஒரு ரசிகர்கள் கூட்டம் உருவானது. இதனால் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார். மேலும் தொடர்ந்து டாப் ஹீரோக்களான ரஜினி, சரத்குமார், சத்யராஜ், அஜித், விஜய் போன்ற நடிகர்களுடன் நடித்து அசத்தினார் இப்படி ஓடிக்கொண்டிருந்த இவர் 2009 ஆம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின் சினிமா உலகில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி குடும்பத்தை கவனிக்க ஆரம்பித்தார். இவர்கள் இருவருக்கும் நைனிகா என்ற பெண் குழந்தை இருக்கிறது அவரும் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார் குடும்பத்துடன் சூப்பராக வாழ்க்கையை வாழ்ந்து வந்த மீனாவுக்கு பிரச்சனை ஏற்பட ஆரம்பித்தது. அதாவது அவரது கணவர் வித்யாசாகருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்தது.

அது நாளடைவில்  பெரிய அளவில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையிலும் வீட்டிலும் அவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் புறா எச்சம் சுவாசித்த காரணத்தினால் அவரது உயிர் பிரிந்தது. இவரது இறப்புச் செய்தி சினிமா பிரபலங்களை ஆட்டம் காண வைத்தது. மீனா ரொம்ப உடைந்து போய் காணப்பட்டார். வித்யாசாகர் மறைவிற்கு பிறகு மீனா எப்படி இருக்கிறார்..

என்பது யாருக்குமே தெரியாமல் இருந்து வந்த நிலையில் அவரது நெருங்கிய தோழிகளான சில நடிகைகள் அவரை வீட்டில் சந்தித்து உள்ளனர். ரம்பா, சங்கீதா, சங்கவி ஆகிய மூவரும் மீனாவை சந்தித்து உள்ளனர் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. மீனா தனது தோழிகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இதோ பாருங்கள்.

Leave a Comment