பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க ஆசைப்பட்ட மீனா..! எந்த கதாபாத்திரத்தில் தெரியுமா.? அவரே சொன்ன தகவல்..

சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக கால் தடம் பதித்து ஒரு கட்டத்தில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் நடிகை மீனா. இவர் முதலில் ரஜினியின் முத்து படத்தில் நடித்து அறிமுகமானார் அதனை தொடர்ந்து இவர் ரஜினி, கமல், அஜித், சரத்குமார், பிரபு, சத்யராஜ் போன்ற நடிகர்களுடன்..

நடித்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்தி கொண்டார். சினிமா உலகில் வெற்றியை மட்டுமே ருசித்து ஓடிக் கொண்டிருந்த இவர் வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் ஒரு மகள் இருக்கிறார். சினிமாவிலும் வாழ்க்கையிலும் சூப்பராக ஓடிய நடிகை மீனாவுக்கு..

அண்மையில் தான் எதிர்பாராத ஒரு அசம்பாவிதம் நடந்தது மீனாவின் கணவர் வித்தியாசாகர் உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார். அதனைத் தொடர்ந்து சில மாதங்கள் வீட்டை விட்டு வெளி வராமல் இருந்த மீனா ஒரு வழியாக நண்பர்களின் உதவியாள் கொஞ்சம் கொஞ்சமாக அந்த துயரத்தில் இருந்து மீண்டு வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை மீனா  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா ராய் புகைப்படத்தை வெளியிட்டு சில பதிவுகளை போட்டுள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது என்னவென்றால் சினிமா உலகில் பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர் மீனா இருப்பினும் அவரது கனவு என்றால் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடிப்பது தான்.

அந்த வாய்ப்பு தற்போது நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கிடைத்துள்ளது தனக்கு பொறாமையாக இருப்பதாக கூறியுள்ளார். மேலும் பேசிய நடிகை மீனா பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகர், நடிகைகளுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார். பிரமாண்ட இயக்குனர்  மணிரத்தினம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் இன்று கோலாகலமாக அனைத்து திரையரங்குகளிலும் ரிலீஸ் ஆகிறது.

 

Leave a Comment