அந்தப் படங்களை பார்க்கும் போது ஐயோ அம்மானு அடித்து கொள்வேன்.. மீனா தவறவிட்ட திரைப்படங்கள் இத்தனையா.?

90 கால கட்டங்களில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் நடிகை மீனா. முதலில் குழந்தை நட்சத்திரமாக பல்வேறு டாப் ஹீரோக்களின் படங்களில் நடிப்பு பின் அவர்களுடனே ஜோடி போட்டு நடித்து உள்ளார். குறிப்பாக ரஜினி உடன் இவர் பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பின் அவருக்கு ஜோடி போட்டு முத்து, வீரா என சொல்லிக் கொண்டே போகலாம் பல படங்களில்  நடித்தார்.

ஏன் கடைசியாக கூட ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்த அசத்தினார். இவரைப் போலவே விஜயகாந்த், அஜித், சரத்குமார், சத்யராஜ், பிரபு போன்ற நடிகரின் படங்களில் நடித்து உள்ளார் இப்படி வெற்றியை மட்டுமே கண்டு ஓடிக்கொண்டிருந்த நடிகை மீனா 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்னும் பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் நைனிகா என்ற ஒரு மகள் இருக்கிறார்.

திருமணம் செய்து கொண்ட பிறகு நடிகை மீனா படங்களில் நடிப்பதை தவிர்த்து குடும்பத்துடன் வாழ்க்கை அனுபவித்து வாழ்ந்து வந்த நிலையில் 2002 ஆம் ஆண்டு மீனாவின் கணவர் உயிர் இழந்தார். இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமாக வெளி உலகத்திற்கு வந்து படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி இருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் தவறவிட்ட படங்கள் குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது..

கமல் நடிப்பில் வெளியான தேவர்மகன் திரைப்படத்தில் முதலில் ரேவதிக்கு பதிலாக நடிகை மீனா தான் நடிக்க் இருந்தார் இந்த சமயத்தில் இரண்டு நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட மீனாவுக்கு மூன்றாவது விதமான லுக் டெஸ்ட் எடுத்து பார்த்தனர் ஆனால் அதுவும் செட் ஆகாததால் தேவர்மகன் படம் அவரை விட்டு போனது..

ரஜினியின் படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் மீனா தான் நடிக்க வேண்டியது ஆனால் ரஜினி உடன் ஜோடி போட்டு நடித்து பெஸ்ட் நடிகை என்ற அவார்டை வைத்திருந்த மீனா வில்லியாக நடித்தாள் இமேஜ் போய்விடும் என கருதி அவரது அம்மா நடிக்க கூடாது என தடுத்து விட்டாராம்.

அஜித்தின் வாலி திரைப்படத்தில் சிம்ரன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிகை மீனா தான் நடிக்க வேண்டியது அப்போது கால்ஷீட் பிரச்சினை காரணமாக விலகினார். விஜயின் பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் நடிக்க வைக்க அணுகினார் ஆனால் அப்பொழுது சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படத்தில் நடிக்கவில்லையாம் இந்த படங்கள் இப்பொழுது கூட மீனா பார்த்தால் ஐய்யயோ நல்ல படங்களை தவற விட்டு விட்டோமே என நினைப்பாராம் இதனை சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறினார்.

Leave a Comment