மீண்டும் முன்னணி நடிகருக்கு ஜோடியாக மீனா.! இந்த வயசிலும் விடாமுயற்சி..

80,90 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கலக்கி வந்தவர் நடிகை மீனா.  இவரின் அழகினாலும், சிறந்த நடிப்பு திறமையினாலும் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அந்த வகையில் ரஜினி உட்பட இன்னும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தவர்.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய சினிமாவில் அனைத்து மொழிகளிலும் நடித்தார்.  அந்த வகையில் பொதுவாக நடிகைகள் குறிப்பிட்ட வயது வரை மட்டும் தான் அவர்களால் கதாநாயகியாக நடிக்க முடியும் இந்த நிலையில் தனது இளமை குறைந்ததும் மீனா தொடர்ந்து குணச்சித்திர நடிகையாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சில வருடங்களாக சினிமாவில் பெரிதாக ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தார். அந்த வகையில் தற்போது இவர் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிகாந்தின் முறைப்பெண்ணாக குஷ்பு மற்றும் மீனா இருவரும் நடித்து  வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் மோகன்லால் நடித்து வரும் திரிஷ்யம் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பிறகு தெலுங்கில் வெங்கடேஷ் நடித்துவரும் திரைப்படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.  இவ்வாறு முக்கிய கதாபாத்திரத்தில் மட்டும் நடித்து வரும் மீனா தற்போது மீண்டும் பிரபல நடிகர் ஒருவருக்கு பல ஆண்டுகள் கழித்து ஜோடியாக நடிக்க உள்ளார்.

அந்தவகையில் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம். இத்திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவர் தான் நடிகை மீனா. அந்த வகையில் இத்திரைப்படத்தில் மிகவும் ஹோம்லியாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

இத்திரைப்படத்தை தெலுங்கு பிரபல இயக்குனர் கோபிசந்த் மிலினேனி. நடிகை மீனா இதற்கு முன்பு பாலகிருஷ்ணாவுடன் இணைந்து 1992ஆம் ஆண்டு அவஸ்தமேதம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment