நடிகை மீனா வானவில் போல் என் வாழ்க்கையை வானம் ஆக்கினாய் என பதிவு செய்த instagram பதிவு தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை மீனா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இவர் ரஜினி விஜயகாந்த் அஜித் விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். மேலும் சமீபகாலமாக அக்கா குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு நயனிகா என்ற மகள் இருக்கிறார்கள் இவர் விஜய் உடன் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் மேலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடைய மிகவும் பிரபலம் அடைந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு குடும்பத்திற்கு ஏற்பட்டது அதில் அனைவரும் உடல் நலம் தேறி வாழ்ந்து வந்தார்கள் ஆனால் வித்யாசாகருக்கு மட்டும் அடிக்கடி நுரையீரல் பிரச்சனை வந்து கொண்டே இருந்தது.
இந்த நிலையில் பல மாதங்களாக நுரையீரலுக்கு சிகிச்சை பெற்று வந்தார். நுரையீரல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் முடிவு செய்தார்கள் ஆனால் நுரையீரல் தானம் கிடைப்பதில் மிகவும் தாமதமானது அதனால்தான் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மீனாவின் கணவர் மறைவு திரை உலகினரை அதிர்ச்சியாகியது மேலும் இவரின் மறைவுக்கு பல பிரபலங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமா பிரபலங்கள் என அனைவரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அமைச்சர் பொன்முடி மீனாவுக்கு ஆதரவு கூறினார் மீனா தன்னுடைய கணவனை எவ்வளவு அதிகமாக நேசித்துள்ளார் என்பது கடந்த ஆண்டு திருமண நாளில் அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தால் அனைவருக்கும் தெரியும்.
அந்தப் புகைப்படத்துடன் அவர் கூறிய வசனமாவது வானவில் போல் என் வாழ்வில் வந்து சேர்ந்து அதை அழகாக வண்ணமயமாக்கி விட்டாய் நீ எனக்கு அளித்த புன்னகையை எப்பொழுதும் அணிந்து கொள்வதற்கான அற்புதமான மற்றும் எனக்கு பிடித்த இடம் என்று பதிவு செய்துள்ளார்.
இன்னும் 12 நாட்கள் மட்டுமே மீனாவின் திருமண நாள் வர இருக்கிறது அந்த சமயத்தில் இப்படி ஒரு மிகப்பெரிய சோகம் கடும் அதிர்ச்சியை ஆழ்த்தியுள்ளது மீனாவின் குடும்பத்தாருக்கு.

90’s kids VS 2k kids காதல் அலப்பறைகள்… ஹாய் நண்பர்களே இந்த ஸ்கூல் பசங்க அருமையா நடிச்சிருக்காங்க பிடித்தால் subscribe பண்ணுங்க லைக் பண்ணுங்க…