வயசானாலும் மவுசு குறையாத மீனா.. 44 வயதிலும் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் ரசிகர்.! மீனாவின் அதிரடி பதில்.!

0

பொதுவாக நடிகைகள் என்றால் தங்களது குறிப்பிட்ட வயது வரை மட்டும் திரைப்படங்களில் நடிப்பார்கள் அதன் பிறகு சினிமாவை விட்டு வெளியேறுபவர்களும் இருக்கிறார்கள் ஒரு சிலர் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால்,வயதானத்திற்கு பிறகும் ஒரு நடிகை சினிமாவில் நடித்தால் அந்த நடிகையை ரசிகர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

ஆனால் தனது இளம் வயதில் இருந்து தற்பொழுது ஒரு குழந்தைக்கு தாயான அதற்குப் பிறகும் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை மீனா. இவர் அழகை இதுவரையிலும் குறையவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து இவர் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அந்த படபிடிப்பில் ரஜினிகாந்த் மீனாவை பார்த்து உனக்கு இதுவரையிலும் அழகு குறையவே இல்லை உன்னை முன்பு எப்படிப் பார்த்தேனோ அதே போலவே தற்பொழுது மிகவும் அழகாக இருக்கிறாய் உன் அழகுக்கு என்ன ரகசியம் என்று கேட்டாராம்.

இவர் தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் அனைத்தும் மிகவும் பிசியாக இருந்து வருகிறார். இவர் இளம் வயதில் எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் மார்க்கெட் இருந்ததோ அதேபோல் தற்போது வரையிலும் இவரின் மார்க்கெட் உச்சத்தில் இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் சினிமாவில் தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வந்த மீனா ஒரு கட்டத்திற்கு பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். திருமணத்திற்குப் பிறகு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார் அந்த வகையில் தற்போது இவர் பல வருடங்கள் கழித்து மீண்டும் ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீப காலங்களாக மீனா ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தொடர்ந்து பதிலளித்து வருகிறார். அந்த வகையில் ஒரு ரசிகர் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு கொஞ்சம் லேட் என மிகவும் ஜாலியாக பதிலளித்துள்ளார் மீனா.

meena 1
meena 1