45 வயதிலும் இளம் நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு துள்ளல் ஆட்டம் போட்ட மீனா.! ஓல்ட் இஸ் கோல்ட் என நிரூபித்து விட்டார் எனக் கூறும் ரசிகர்கள்.

meena
meena

நடிகை மீனா தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்து வந்தவர் இவர் தமிழில் முன்னணி நடிகர்களாக வலம்வந்த ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். தமிழில் முதன்முதலாக நெஞ்சங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து அன்புள்ள ரஜினிகாந்த் என்ற திரைப்படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு புதிய கதை என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக நடிக்க ஆரம்பித்தார் மேலும் இவர் நடிப்பில் வெளியாகிய என் ராசாவின் மனசிலே இதயவாசல், எஜமான்,  நாட்டாமை, ராஜகுமாரன் மாமன் மகள் என பல திரைப்படங்கள்  வெற்றி திரைப்படங்களாக அமைந்தன.

மேலும் மீனா சமீபத்தில் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த நிலையில் ரவுடி பேபி என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இன்னும் இளமையுடன் நடித்து வரும் மீனா சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிட்டு ரசிகர்களை தனது பக்கம் கவர்ந்து இழுப்பார்.

அந்த வகையில் தற்பொழுது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது அந்த வீடியோவில் மீனா கலக்கலாக நடனமாடிய உள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ. வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்