சாத்து நட சாத்து.. இரண்டே ஸ்டெப் போட்டு அரங்கத்தையே அதிரவிட்ட மீனா.! வைரலாகும் வீடியோ.

Meena dance
Meena dance

Meena : நடிகை மீனா சேதுபதி ஐபிஎஸ் என்ற திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இப்போ சாத்து நட சாத்து என்ற பாடலுக்கு விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் நடிகை மீனா நடனமாடி ஒட்டுமொத்த அரங்கத்தையும் சிரிப்பலையில் அதிர வைத்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது அந்த வகையில் வருகின்ற ஆகஸ்ட் 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் ஏழாவது சீசன் நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. அதேபோல் விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வரும் ரியலிட்டி ஷோக்கலில் பெரிய வரவேற்பு பெற்ற ஸ்டார்ட் மியூசிக்.

இந்த நிகழ்ச்சியை vj பிரியங்கா தான் தொகுத்து வழங்கி வருகிறார் அதேபோல் இந்த நிகழ்ச்சியில் வாரந்தோறும் பல கலைஞர்கள் இரு அணிகளாக கலந்து கொள்வார்கள் அந்த வகையில் சமீபத்தில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்த நடிகை மீனா மற்றும் சங்கவி ஆகியோர் ஒரு அணியாக கலந்து கொண்டுள்ளார்கள்.

இந்த நிகழ்ச்சியில் என்ன பாட சொல்லாத என்ற சுற்றில் ஒரு அணியில் உள்ளவர்களுக்கு மூன்று பாடல்கள் கொடுக்கப்படும் அந்த அணியில் உள்ள ஒருவர் அந்த பாடலுக்கு நடித்து காட்ட வேண்டும் அதனை சரியாக பார்த்து எந்த பாடல் என்று காதில் ஹெட்போன் மாட்டிருப்பவர் கண்டுபிடிக்க வேண்டும் அதேபோல் எதிரணிக்கும் இதே போல் சுற்றுகள் வைக்கப்பட்டு வெற்றியாளர்கள் யார் என்பதை அறிவிக்கப்படுவார்கள்.

அந்த வகையில் மீனா ஆக்ஷனில் இறங்கி சங்கவி ஹெட்போனை மாட்டிக் கொண்டு நிற்பார் அப்பொழுது மீனா சாத்து நடை சாத்து பாடல் ஒளிபரப்பப்பட்டது உடனே மீனா சேதுபதி ஐபிஎஸ் படத்தில் எப்படி நடனம் ஆடினாரோ அதேபோல் ஸ்டெப் போட்டார். இதற்கு அரங்கமே அதிர்ந்தது ஆனால் சங்கவியால் அந்த பாடல் என்ன என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை ஒரு கட்டத்தில் மீனா சாத்து என்பது போல் சைகை காட்டினார் ஆனாலும் சங்கவி சாத்து மூடு என்ற பெயர்களை கூறினாரே தவிர பாடலை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிகழ்ச்சி செப்டம்பர் 3ஆம் தேதி நடைபெற்றது சேதுபதி படத்தில் விஜயகாந்த் மீனா இருவரும் ஒரே பள்ளியில் ஆசிரியராக நடித்திருப்பார்கள் அப்பொழுது மீனாவின் பள்ளியை தீவிரவாதிகள் பிணையாக பிடித்துக் கொண்டு விஜயகாந்த் அவர்களிடம் பேரம் பேசுவார்கள் அப்பொழுது தீவிரவாதிகளை திசைதிருப்ப போலீசார்களை உள்ளே வரவைக்க அந்த கவர்ச்சி நடனம் ஆடி இருப்பார்.