காதும் காதும் வைத்தது போல் பிரபல டான்ஸ் மாஸ்டருடன் நைனிகாவின் பிறந்தநாளை கொண்டாடிய மீனா..!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகை தான் நடிகை மீனா இவ்வாறு பிரபலமான நமது குழந்தை நட்சத்திரம் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜயகாந்த், அஜித், விஜய் போன்ற பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இவ்வாறு இவர் தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளிலும் கொடிக்கட்டி பறந்தது மட்டுமில்லாமல் அவற்றில் முன்னணி கதாநாயகியாகவும் வலம் வந்துள்ளார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் குண சித்திர வேடத்தில் நடிப்பதில் அதிக அளவு ஆர்வம் காட்டி வருவதாக தெரியவந்துள்ளது.

அந்த வகையில் தற்பொழுது தனக்கு பொருந்தும் அளவிற்கு எந்த ஒரு கதை வந்தாலும் சரி தற்பொழுது வரை திரையில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார் அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த திரைப்படம் தான் மலையாளத்தில் வெளிவந்த திருஷியம் 2 என்ற திரைப்படம் ஆகும்.

இந்நிலையில் நடிகை மீனாவிற்கு கடந்த வருடம் ஒரு சோகமான வருடமாக அமைந்தது ஏனெனில் அவருடைய கணவர் உடல்நல குறைவின் காரணமாக உயிரிழந்து விட்டார் இந்த உயிரிழப்பு சம்பவத்திலிருந்து மீண்டு வந்த நடிகை மீனா தற்பொழுது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீனா எப்படியோ அதேபோல தான் அவருடைய மகள் நைனிகாவும் இவரும் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் அந்த வகையில் ஜனவரி ஒன்றாம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய நமது நடிகை மீனாவின் மகள் பிரபல நடன இயக்குனர் கலா மாஸ்டர் உடன் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

இவ்வாறு அவர்கள் கேக் ஊட்டி கொஞ்சம் விளையாடும் அந்த அழகான காட்சி சமூக வலைதள பக்கத்தில் பதிலாக பரவி வருகிறது.

nanika -09
nanika -09

Leave a Comment