தாத்தா வயது நடிகர் ஆனாலும் பரவாயில்லை என மீனா ஜோடி போட்ட 6 நடிகர்கள்.! ஆத்தாடி அதுக்குன்னு 30 வயது வித்தியாசமா..

Meena : தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் கொடி கட்டி பறந்தவர் நடிகை மீனா இவர் சினிமாவில் முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக நடித்தார். சினிமாவில் நடிக்க வந்து 40 வருடங்களை கடந்து விட்டது இந்த நிலையில் சமீபத்தில் மீனா 40 என்ற விழா கொண்டாட பட்டது ஒரு நடிகை 40 வருடமாக சினிமாவில் ஜொலிக்க மிகவும் கஷ்டம்தான் இது சாதாரண விஷயம் கிடையாது.

ஆரம்ப காலகட்டத்தில் நடிகை மீனா 60 வயதானாலும் பரவாயில்லை என ஆறு நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து ஹிட் கொடுத்துள்ளார் அது எந்தெந்த நடிகர் என்று இங்கே காணலாம்.

சரத்குமார் : நடிகர் சரத்குமார் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் இவர் ஆரம்ப காலகட்டத்தில் வில்லனாகவும் குணசத்திர கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார் பிறகு சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகிய ரிஷி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார். இந்த திரைப்படத்தில் ஜோடியாக நடிகை மீனா நடித்திருப்பார் இந்த திரைப்படத்தில் மீனா நடிக்கும் பொழுது சரத்குமார் மற்றும் மீனாவுக்கும் 22 வயது வித்தியாசம். அதை எல்லாம் பொருட்படுத்தாமல் மீனா அந்த திரைப்படத்தில் ரொமான்ஸ் காட்சிகளில் பின்னே பெடல் எடுத்திருந்தார்.

நடிகர் கமல் : தமிழ் சினிமாவில் உலகநாயகன் என்ற அந்தஸ்துடன் அழைக்கப்படுபவர் நடிகர் கமல். கமலுடன் நடிக்க பல நடிகைகள் பயப்படுவார்கள் அதற்கு காரணம் கமல் தன்னுடைய படத்தில் எப்படியாவது ஒரு கிஸ் சீனை வைத்து விடுவார் இந்த நிலையில் கமலுடன் அவ்வை சண்முகி திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தவர் மீனா இந்த திரைப்படத்தில் ஜானகி மாமி என்ற கதாபாத்திரத்தில் தான் மீனா நடித்திருந்தார். படத்தில் கமலுடன் சண்டை போடும் போதும் சரி ரொமான்ஸ் செய்யும்போதும் சரி இவர்களுக்கு இடையே 22 வயது வித்தியாசம் இருப்பது கொஞ்சம் கூட தெரியாது இந்த திரைப்படமும் மாபெரும் ஹிட் அடித்தது.

சத்யராஜ் : சத்யராஜ் சினிமாவில் ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் அந்த வகையில் 1994 ஆம் ஆண்டு சத்யராஜ் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தாய்மாமன் இந்த திரைப்படத்தில் சத்யராஜ் அவர்களுக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். மார்டன் கேர்ள் ஆக இருக்கும் மீனா கிராமத்து ஆளாக இருக்கும் தாய் மாமன் சத்யராஜை எப்படி காதலிக்க வைக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை தற்பொழுது மீனாவுக்கு 46 வயது அதேபோல் சத்யராஜ் அவர்களுக்கு 68 வயது இந்த நிலையில் பல வயது வித்தியாசம் இருந்தும் மீனா சத்யராஜ் அவர்களுடன் நடித்த தாய்மாமன் திரைப்படம் ஹிட் கொடுத்தார்.

ரஜினி : நடிகை மீனா ரஜினியுடன் முதன்முதலாக அன்புள்ள ரஜினிகாந்த் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் அதன் பிறகு மீண்டும் ரஜினியுடன் முத்து, எஜமான், வீரா என மூன்று திரைப்படங்களில் நடித்து மாபெரும் ஹிட் கொடுத்துள்ளார் தற்பொழுது மீனாவுக்கு 46 வயது அதேபோல் ரஜினிக்கு 72 வயது இப்படி அதிக வயது வித்தியாசம் இருந்தும் முத்து திரைப்படத்தில் முத்தக் காட்சியில் நடித்து மிரட்டி இருந்தார் மீனா.

ராஜ்கிரண் : நடிகை மீனா முதன் முதலில் தமிழ் சினிமாவில் என் ராசாவின் மனசிலேயே என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானார் இந்த திரைப்படத்தில் முரட்டு நடிகராக நடித்திருந்தவர் ராஜ்கிரண். மீனாதான் இந்த திரைப்படத்திற்கு வேண்டும் என ராஜ்கிரன் ஒத்த காலில் நின்றார் என கூறப்பட்டது மீனாவிற்கும் ராஜ்கிரன் அவர்களுக்கும் 30 வயது வித்தியாசம் இருந்தும் வயது வித்தியாசத்தை பொருட்படுத்தாமல் மீனா அச்சு அசல் கிராமத்து பெண்ணாகவே மாறி தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிக்காட்டி இந்த திரைப்படத்தில் அசத்தியிருந்தார். 46 வயது இருக்கும் மீனா 74 வயதுடைய ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடித்தது பிரமிப்பில் அழுத்தினார். ஏனென்றால் கிட்டத்தட்ட 30 வயது வித்தியாசம்.

மோகன்லால் : மலையாளத்தில் வெளியாகிய சூப்பர் ஹிட் திரைப்படம் தான் திருஷயம் இந்த திரைப்படத்தின் முதல் மற்றும் இரண்டாவது பாகத்தில் மோகன்லால் அவர்களுக்கு ஜோடியாக நடித்தவர் மீனா மோகன்லால் மற்றும் மீனா இருவரும் கணவன் மனைவியாக இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்கள் உண்மையாலும் கணவன் மனைவி எப்படி இருப்பார்களோ அந்த அளவு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது. இந்த திரைப்படத்தில் நடித்த மோகன்லாலுக்கு 62 வயது ஆனால் மீனாவிற்கு 46 வயது தான் இருந்தாலும் பெரிதாக வயது வித்தியாசம் இல்லை என்பது போல் திரையில் தெரிந்தது.

இப்படி சினிமாவில் கொடி கட்டி பறந்து வந்த மீனா நடிப்பிற்காக வயது வித்தியாசம் பார்க்காமல் 60 வயது ஆனாலும் பரவாயில்லை என பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து ஹிட் கொடுத்துள்ளார்.