பண்டிகை நாட்கள் வந்து விட்டாலே எந்தெந்த தொலைக்காட்சியில் என்னென்ன திரைப்படம் என்பதை மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள ஆவலுடன் இருப்பார்கள் அந்த வகையில் ஒவ்வொரு தொலைக்காட்சியும் புதுபுது திரைப்படங்களை வெளியிட்டு பண்டிகை நாட்களில் தங்களுடைய டிஆர்பி தரத்தை உயர்த்திக் கொள்வார்கள் அந்த வகையில் வருகிற மே 1ம் தேதி உழைப்பாளர் தினம் என்பதால் ஒவ்வொரு தொலைக்காட்சியும் புதுப்புது திரைப்படங்களை வெளியிட இருக்கிறார்கள்.
அந்த வகையில் சன் தொலைக்காட்சி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகிய மாஸ்டர் திரைப்படத்தை மே 1ம் தேதி வெளியிட இருக்கிறது இந்த திரைப்படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி அர்ஜுன் தாஸ் ,ஆண்ட்ரியா ,சாந்தனு பாக்கியராஜ், கௌரி கிஷன், ரம்யா சுப்பிரமணியம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் இந்த திரைப்படம் திரைக்கு வந்து சில மாதங்களே ஆன நிலையில் தற்போது சன் தொலைக்காட்சியில் மே 1 உழைப்பாளர் தினத்தில் சிறப்புத் திரைப்படமாக வெளியிடுகிறார்கள்.
அதேபோல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அஜித் ,ஹீமா குரோஷி கார்த்திகேயா, சுமித்ரா, உமாசங்கரி ஆகியோர்கள் நடித்திருந்தார்கள் இந்த திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு திரையரங்கில் திரையிடப்பட்டது இந்த நிலையில் சமீபத்தில்தான் OTT இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அப்படி இருக்கும் வகையில் மே 1 உழைப்பாளர் தினத்தில் சிறப்புத் திரைப்படமாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இந்த திரைப்படத்தை ஒளிபரப்ப இருக்கிறார்கள் அதனால் டி ஆர்பி யில் அதிக மாற்றம் ஏற்படும் என பலரும் கூறி வருகிறார்கள்.
இந்த இரண்டு படங்களுக்கு போட்டியாக விஜய் தொலைக்காட்சி அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய புஷ்பா திரைப்படத்தை ஒளிபரப்பை இருக்கிறார்கள் இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சமந்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது அதுமட்டுமில்லாமல் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.
அப்படி இருக்கும் வகையில் திரைக்கு வந்து சில மாதங்களே ஆன புஷ்பா திரைப்படத்தினை விஜய் தொலைக்காட்சி மே 1 உழைப்பாளர் தினத்தில் ஒளிபரப்ப இருக்கிறார்கள் அதனால் டிஆர்பி யில் விஜய் தொலைக்காட்சி அதிக ரேட்டிங் பெறும் என பலரும் கூறி வருகிறார்கள் ஏனென்றால் புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
