வீரப்பன் மகள் நடித்திருக்கும் மாவீரன் பிள்ளை பட டீசர்.! வைரலாகும் வீடியோ.

0

தமிழ்,கர்நாடகா,கேரளா போன்ற அரசுகளுக்கு பெரும் சவாலாக விளங்கியவர் சந்தனக்கட்டை கடத்தல் வீரப்பன். இவர் பல ஆண்டுகளாக காட்டிலேயே மறைந்து வாழ்ந்தார் என்பது அறிந்த ஒன்றுதான். இப்படி பிரபலமடைந்த இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள்.

அதில் இவரின் இளைய மகள் தற்போது சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளார். அந்த வகையில் இவரின் இளைய மகள் விஜயலக்ஷ்மி தற்பொழுது மாவீரன் பிள்ளை என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். அந்த திரைப்படத்தின் டீசர் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

வீரப்பன் சதனம் கட்டை கடத்தல், யானைகளைக் கொன்று தந்தம்  பறித்தல் போன்ற பல குற்ற செயல்களைச் செய்ததால் போலீசார் தீவிரமாக தேடி வந்தார்கள் பல ஆண்டுகாலமாக தேடியும் கிடைக்கவில்லை.பிறகு 2004ஆம் ஆண்டு போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். எனவே இவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களும்,  சீரியல்களும் ஏற்கனவே வெளிவந்துள்ளது.அந்த வகையில் தனது அப்பாவின் பெயரை குறிக்கும் வகையில் மாவீரன் பிள்ளை என்ற படத்தில் நடித்துள்ளார்.

வீரப்பனுக்கு இரண்டு பெண் மக்கள் உள்ளார்கள், அந்த வகையில் இவரின் மூத்த மகள் வித்யா ராணி கடந்த ஆண்டுதான் பாஜகவில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து இளைய மகள் விஜயலட்சுமி தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் தற்போது இவர் குழந்தைகளுக்கு காப்புரிமை மற்றும் ஜாதி பிரச்சினையை பேசும் திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த வகையில் தற்பொழுது மாவீரன் பிள்ளை திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது. இதோ அந்த டீசர்.