அடேய் மாஸ்டர் அப்டேட் இல்லாமல் விஜய் பிறந்த நாளா.? படக்குழு வெளியிட்ட மரண மாஸ் போஸ்டர் கடுப்பாகும் ரசிகர்கள்.!

master update
master update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் இவர் தற்போது தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார், அதனால் ரசிகர்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை அனைவரும் வாழ்த்து கூறி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் சமூகவலைதளத்தில் ரசிகர்கள் ட்ரண்ட் செய்து வருகிறார்கள்.

தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தை  லோகேஷ் கனகராஜ் தான் இயக்கி உள்ளார், படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு பாக்கியராஜ், கௌரி கிஷன், ஆண்ட்ரியா என பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளார்கள், இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக வேண்டியது ஆனால் ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் படத்தில் இருந்து ஏதாவது அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள், அதுமட்டுமில்லாமல் விஜய் பிறந்த நாளான இன்று மாஸ்டர் திரைப்படத்திலிருந்து ஏதாவது அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளது அந்த போஸ்டர் மிகவும் ஸ்டைலிஷாக இருக்கிறது அதனால் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. ஆனால் அந்த போஸ்டரில் புதிதாக எதுவும் இடம்பெறவில்லை அதனால் ரசிகர்கள் கொஞ்சம் ஏமாற்றம் அடைந்து உள்ளார்கள்.

ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பது ட்ரெய்லர், டீஸர் என ஏதாவது வெளியாகும் என காத்துக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் இப்படி படக்குழு வெறும் போஸ்டரை வெளியிட்டு எந்த ஒரு அப்டேட் கொடுக்காததால் கடுப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.