மாஸ்டரா வலிமையா முதல்நாள் வசூலை முறியடிக்குமா அஜித்தின் வலிமை.?

விஜய்யின் மாஸ்டர் திரைப் படத்தின் முதல் நாள்   வசூலை அஜித்தின் வலிமை படத்தின் முதல் நாள் வசூல் வசூலை முறியடிக்குமா என்பது தான் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகமே இதை தான் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

அஜித் நடித்த வாலி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகி மிரட்டலாக ஓடிக்கொண்டிருக்கிறது. அஜித் வலிமை திரைப்படத்தில் ஆக்ஷன் காட்சிகள் பைக் காட்சிகள் என அனைத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். முதல் நாள் முதல் ஷோவை ஏராளமானவர்கள் கண்டுகளித்துள்ளார்கள் இரண்டு வருடங்கள் காத்திருப்பிற்கு சரியான திரைப்படமாக அமைந்துள்ளது வலிமை என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

வலிமை திரை படத்தில் அஜித்தின் என்ட்ரி கிளைமாக்ஸ் என அனைத்தும் ரசிகர்களை மிரள வைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் வலிமை படத்திற்கு இணையான ஆக்ஷன் பைக் ரேஸ்கள் கொண்ட இன்னொரு திரைப்படத்தை உருவாக்குவது மிகவும் கடினம் ஏனென்றால் ஹாலிவுட் திரைப்படங்களை மிஞ்சி விட்டார்கள் என பலரும் கமெண்ட் செய்துள்ளார்கள்.

ரசிகர்களின் ஆரவாரம் கொண்டாட்டத்துடன் ரிலீஸ் ஆகியவலிமை  திரைப்படத்தை பார்க்க அனைவரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.  இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் விஜய் மற்றும் அஜீத் ரசிகர்கள் வழக்கம் போல் சமூக வலைதளத்தில் மோதிக் கொள்கிறார்கள். பீஸ்ட் திரைப்படத்தின் அரபு குத்து பாடல் வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் வலிமை டிரைலர் வெளியானது.

வலிமை டிரைலருக்கு குறிப்பிட்ட மில்லியன் பார்வையாளர்கள் தான் கிடைத்தது ஆனால் அரபிக் குத்து பாடலுக்கு தொடர்ந்து பார்வையாளர்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது இதனை வைத்து விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களை சீண்டி வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் வலிமை திரைப் படத்தின் ரிலீசை வைத்து மாஸ்டர் திரைப் படத்தின் வசூலை மிஞ்சுமா என்பதையும் பார்க்கலாம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

2021 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆன மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் 50 சதவீத பார்வையாளர்களுடன் ரிலீஸ் செய்யப்பட்டது ஆனால் 135 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் முதல்நாள் தமிழகத்தில் மட்டும் 34.5 கோடி வசூல் செய்தது. அதேபோல் ரிலீஸான 3 நாட்களில் உலகம் முழுவதும் 100 கோடி வசூலை தொட்டது மொத்தமாக மாஸ்டர் திரைப்படம் 230 முதல் 300 கோடி வரை வசூல் செய்தது என  ஒரு தகவல் வெளியானது.

இந்த நிலையில் வலிமை திரைப்படம் கொரோனாவால் தள்ளி போனாலும் 100 சதவீத திரையரங்க பார்வையாளர்கள் அனுமதியுடன் ரிலீஸாகியுள்ளது 150 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் ப்ரீ ரிலீஸ் வியாபாரத்திலேயே 300 கோடிக்கு மேல் வசூல் செய்து விட்டது. அதுமட்டுமில்லாமல் பெரும்பாலான திரையரங்குகள் மூன்று நாட்கள் ஹவுஸ்புல் என்ற நிலைமை நீடித்து வரும் அந்தளவு டிக்கெட் விற்றுத் தீர்ந்து விட்டதாக கூறப்படுகிறது இதனால் மாஸ்டர் திரைப்படம் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் வசூலித்த 100 கோடியை வலிமை திரைப்படம் முதல் நாள் முதல் ஷோ விலையே பெறும் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இதற்கு காரணம் நூறு சதவீத பார்வையாளர்களுடன் படம் ரிலீஸ் ஆகி இருப்பது தான் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment