மாஸ்டர் டிரைலருக்கு தேதி குறிச்சாச்சு.! இதோ அதிரடி அப்டேட்…

தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு நடிகர் என்றால் அவர்களில் விஜய்யும் ஒருவர், இவர் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார், இவர் நடிப்பில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்த திரைப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதியே திரைக்கு வர வேண்டியது ஆனால் ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே போகிறது, படத்தில் விஜய்சதுபதி வில்லனாகவும் மாளவிகா மோகனன் விஜய்க்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ஆண்ட்ரியா, சாந்தனு பாக்கியராஜ், கௌரி கிஷன் என பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படத்திலிருந்து டிரைலர் எப்போது வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள், ட்ரைலர் கடந்த மாதம் 22ஆம் தேதி வெளியாகும் என ஆவலுடன் இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சமாக இருந்தது. இந்த நிலையில் ட்ரைலர் விடுவீர்களா மாட்டீர்களா என படக்குழுவினரை ரசிகர்கள் தொல்லை செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

தற்போது கிடைத்துள்ள தகவலின்படி மாஸ்டர் திரைப்படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின விருந்தாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது அல்லது அக்டோபர் 15ஆம் தேதி இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகலாம் என கூறப்படுகிறது, ட்ரைலர் கண்டிப்பாக இந்த இரண்டு தினங்களில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

master
master

மேலும் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி 65 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment