மாஸ்டர் ஷுட்டிங் பார்ட்டில் வருமானவரி சோதனையா.!

அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் திரைப்படத்தில் விஜய் மற்றும் நயன்தாரா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.அதுமட்டுமில்லாமல் இப்ப படம்  வெற்றிப் படமாகவும் அறிவிவக்கப்பட்டது.

இப்படம் ஒட்டுமொத்தமாக சுமார் 300 கோடியை வசூல் செய்ததாக  ஊடகங்கள் அறிவித்தன. ஆனால் வசூல் நிலவரம் குறித்து தயாரிப்பாளர்  எதுவும் கூறவில்லை. இந்தநிலையில் வருமான வரி சோதனை நடந்தது. பிகில் படத்தில் நடிகர் விஜய் எவ்வளவு சம்பளம் என்பது குறித்து. அவரிடம் சோதனை நடத்த உள்ள நிலையில் அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் எனவே அந்த இடத்திற்கே வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனையால் படம் நிறுத்தப்பட்டது. இதுமட்டுமல்லாது ஏஜிஎஸ் நிறுவனத்தின் மீதும் மற்றும் அதன் 20 கிளைகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

இதை தவிர சினிமா பைனான்சியரான அன்புச்செழியன் சென்னை வீட்டிலும் நடத்தப்பட்டது.

Leave a Comment