பொங்கலில் பட்டையை கிளப்பும் மாஸ்டர் திரை விமர்சனம் இதோ.!

மாஸ்டர் திரைப்படம் OTT இணையதளத்தில் வெளியாகிறது என கூறினார்கள் அதுமட்டுமில்லாமல் கொரோனா தாக்கம், மாஸ்டர் லீக்கான காட்சிகள் என பல தடைகள் இருந்தாலும் அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்து இன்று உலகம் முழுவதும் மாஸ்டர் திரைப்படம் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதன்முறையாக தளபதி விஜய் நடித்துள்ளார்.  இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.  அந்த வகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா இல்லையா என்பதை பார்க்கலாம்.

மாஸ்டர் கதை

தளபதி விஜய் இந்த திரைப்படத்தில் கல்லூரிப் பேராசிரியராக நடித்துள்ளார் ஜேடி விஜய் என்ற கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளார்.  தளபதி விஜய் படத்தில் எப்பொழுதும் பாட்டில் கையுமாக இருக்கிறார். அதனால் இவர் மீது பலத்த குற்றச்சாட்டை எழுப்பி வந்தது. இதனால் ஒரு காலகட்டத்தில் விஜய் மீது பெரிய குற்றச்சாட்டு வந்ததால் அவரை அங்கிருந்து வெளியேற்றி சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு ஆசிரியராக நியமிக்கப் படுகிறார்.

அங்கு சென்ற விஜய்க்கு ஆரம்பத்திலிருந்தே பிரச்சனை ஏற்படுகிறது.  அதுவும் மாணவர்களுடன் இதற்கு முக்கிய காரணமாக இருப்பது விஜய் சேதுபதிதான்.  விஜய் சேதுபதி இந்த திரைப்படத்தில் பவானி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஒரு காலகட்டத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதிக்கு நேரடியாக பிரச்சனை வருவதால் யுத்தத்தில் கடைசியில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதுதான் மீதிக்கதை.

படத்தைப் பற்றி

படத்தில் ஆரம்ப கட்டத்தில் விஜய் குடிகார ஆசிரியராக முதல் காட்சியில் வருகிறார் அப்போது ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்கும் படி அமைந்தது. அதுமட்டுமில்லாமல் விஜய் வரும் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களிடையே பட்டாசு போல் வெடிக்க வைத்துள்ளது மேலும் தளபதி விஜய் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி மாணவர்களுடன் நடந்துகொள்வது விஜய் சேதுபதியிடம் சவால் விடுவது என  பட்டைய கிளப்புகிறார்.

அதுமட்டுமில்லாமல் சட்டையை கழட்டிவிட்டு கபடியில் கில்லி போல் ஆடுவது என சண்டை காட்சிகள் முழுவதும் விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் தான்.

பொதுவாக விஜய் திரைப்படம் என்றாலே விஜயை சுற்றிதான் கதை இருக்கும் ஆனால் இந்த திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்டு விஜய் சேதுபதி பவானியாக மிரட்டியுள்ளார் அதுவும் இடைவெளி காட்சி இரண்டு பேருக்கும் உள்ள போட்டி செம மாஸ்.

இந்த திரைப்படத்தில் விஜய் கல்லூரி ஆசிரியராக நடித்துள்ளது தேவையில்லாத சீன் ஆக இருக்கிறது எனத் தோன்றுகிறது. மேலும் படத்தில் ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு மகேந்திரன் என பல நடிகர்கள் தங்களுடைய  கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்துள்ளார்கள்.

படத்திற்கு மிகப்பெரிய சப்போர்ட் என்றால் சண்டைக்காட்சிகள் தான் ஒவ்வொரு சண்டைக்காட்சிகளும் மிரட்டலாக இருக்கிறது சண்டைக்காட்சியில் சண்டை இயக்குனர் சில்வா மெட்ரோ ரயிலில் ஆரம்பித்து சண்டை இல்லாமல் வரும் சண்டையை கபடி சண்டையாக மாற்றி சில மூவ்மெண்ட செய்து தெறிக்க விட்டுள்ளார்.

விஜய் சேதுபதி விஜய் சண்டைக்காட்சிகள் சொல்லவே முடியாது அந்த அளவு பிரமாதமாக அமைந்துள்ளது. படத்தின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு சப்போர்ட்டாக அமைந்துவிட்டது. படத்தின் முதல் பாதி நீளமாக இருந்தாலும் ஆட்டம் பாட்டம் சண்டை, விஜய் விஜய் சேதுபதி தொடக்கம் என பரபரப்பாக செல்கிறது.

இரண்டாம் பாதி பரபரப்பாக சென்றாலும் ஒரு சில இடங்களில் கொஞ்சம் சோர்வை தருகிறது. இதற்குக் காரணம் படத்தின் நீளம். இதையெல்லாம் தாண்டி படத்தின் முக்கிய ஹீரோ என்றால் அனிருத் தான் ஒவ்வொரு பின்னணி காட்சிகளுக்கும் பின்னணி இசை அமைத்து பாடல்களில் ருத்ர தாண்டவம் ஆடி விட்டார்.

மொத்தத்தில் மாஸ்டர் மாஸ்டர் ஆகவே பார்க்கலாம்.

Leave a Comment