இதுக்கு முன்னாடி இங்க வந்தவனெல்லாம் உயிர் பயத்தில் ஓடி போய் இருக்கலாம்.. ஆனால் என் கதையே வேற.! மிரட்டல் சண்டையுடன் வெளியானது மாஸ்டர் ப்ரோமோ வீடியோ.!

தளபதி விஜய் பிகில் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த வருடம் ரிலீசாக வேண்டியது ஆனால் கொரனோ தொற்று காரணமாக ரிலீஸ் தள்ளிபோய்க்கொண்டே போனது.

மேலும் மாஸ்டர் திரைப் படத்தில் விஜயுடன் இணைந்து விஜய் சேதுபதி மாளவிகா மோகனன், சஞ்சீவ், சாந்தனு பாக்கியராஜ்,  மாஸ்டர் மகேந்திரன்,  ஆண்ட்ரியா,  கௌரி கிஷன் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகாது OTT இணையதளத்தில் வெளியாகும் என பலரும் கூறி வந்த நிலையில் மாஸ்டர் திரைப்படம் கண்டிப்பாக திரையரங்கில் தான் ரிலீஸ் ஆகும் என படக்குழு மற்றும் விஜய் அறிவித்தார்கள்.

இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது, அதுமட்டுமில்லாமல் முன்பு திரையரங்கில் 50 சதவீத பார்வையாளர்களுடன் தான் இயங்க வேண்டும் என தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஆனால் தற்பொழுது விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க அரசாணை வெளியாகி உள்ளது.  இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் டிரைலருக்கு ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு முன் வெளியாகிய டீசர் ரசிகர்களிடம் வைரலானது மட்டுமல்லாமல் பல சாதனைகளை நிகழ்த்தியது.  இந்த நிலையில் தினம் தினம் ஒரு ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டு வருகிறது அந்த வகையில் இன்று விஜய் பேசிய பஞ்ச் வசனங்கள் உடன் ஒரு ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.

இந்த ப்ரோமோ வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் பலரும் ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment