மாஸ்டர் படப்பிடிப்பு முடிந்ததும் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் என்ன செய்துள்ளார்கள் பார்த்தீர்களா.! இதோ புகைப்படத்துடன் ஆதாரம்.!

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன், அதுமட்டுமில்லாமல் வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது டப்பிங் பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது.

அதுமட்டுமில்லாமல் வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி இந்த திரைப்படத்தை உலகம் முழுவதும் திரையிட படக்குழு முடிவு செய்துள்ளது, இதனை அனிருத் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், கௌரி கிஷன், ஸ்ரீமன், சஞ்சீவ் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது என லோகேஷ் கனகராஜ் தனது படக்குழுவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு கூறினார், இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்து செல்லும்பொழுது லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் இருவரும் மிகவும் சிறப்பான வேலை ஒன்றை செய்துள்ளார்கள்.

ஆம் படப்பிடிப்பை முடித்து விட்டு செல்லும் பொழுது அங்கு மரக்கன்றுகள் நட்டு விட்டு சென்றுள்ளார்கள், தற்போது இந்த விஷயம் புகைப்படத்துடன் சமூகவலைதளத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது.

Leave a Comment